பக்கம்:வாடா மல்லி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 127


என்னெல்லாமோ பண்ணுனானாம். அந்தக் கருவாப்பய’ அருணாசலம் மெனக்கெட்டு வயலுக்கு சைக்கிளில் வந்து என்கிட்ட சொல்லிட்டுப் போறான். அதனாலதான் இப்படி ஒடி வர்றேன்.”

மரகதம், அப்பாவைத் திடுக்கிட்டுப் பார்த்துவிட்டு, வீட்டின் கிழக்குச் சுவரைப் பார்த்தாள். ஜன்னல் திறந்திருக்கிறது. ஒடிப்போய் சாத்தினாள். பிறகு அப்பா பக்கம் திரும்பி, ஏதோ சமாளிக்கப்போனாள். இதற்குள், வெள்ளையம்மா விளக்கம் சொன்னாள்.

“எல்லாம் இந்த ஊருக்கு இடையில வந்துட்டு இடையிலேயே போன சீதாலட்சுமியோட வேலை. நம்ம பிள்ளைய பேயா ஆட்டுறான்னு சொல்லேண்டி..”

“பூவம்மாவ கூப்பிடுறதுக்கென்ன... நம்ம நிலமை தான் அந்த மொள்ளமாரி வார அளவுக்கு ஆயிட்டே.”

“கூப்பிட்டுக் கூப்பிட்டு வாயே வலிச்சுப் போச்சு. என் தம்பி வந்து கூப்பிடட்டும். வீட்டுக்கு நான் வந்து. ஒம் புருஷன் விம்புக்கார பிள்ளையாரு. அய்யோ, பேரைச் சொல்லிட்டேனே. எப்படி என் வீட்டுப் படியேறலாம்னு கேட்டால் நான் எந்த முகத்தோட திரும்புவேமுன்னு சொன்னதையே சொல்லுதாள். ஆனாலும் இந்த வீம்பு ஆவாதும்மா... ஊரு ஒலகத்துல செய்யாததையா செய்தாள். ஆசைப்பட்டவன காதலிச்சாள். அவனையே கட்டிக்கிட்டாள். அதுல என்ன தப்பு.”

வெள்ளையம்மா, தானே ஒரு காலத்தில் இந்தப் பிள்ளையாரைக் காதலித்ததில் லயித்து நின்றாள். பிள்ளை யாரும், அவள் பேச்சை லேசாய் ரசித்தார். பூவம்மா அவரது சொந்த பெரியப்பா மகள். இவருக்கு மூன்று வயது மூத்தவள். சரியாக நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘வீமசேனன்’ மாதிரி இருந்த லோகல் தர்மரை, காதலித்தாள். கம்மாக்காடும், சோளத் தட்டைகளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/149&oldid=1249604" இலிருந்து மீள்விக்கப்பட்டது