பக்கம்:வாடா மல்லி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii


இவர்களைப்பற்றி இப்படி முதல் தடவையாக ஒரு நாவல் வந்திருக்கிறது என்று சொல்வதற்கு அந்தப் பத்திரிகைகளுக்கு விசாலமான மனம் இல்லை.

கூவாகத்தில் கூடிய அலித் தோழர்களுக்காக ஒரு விழா நடந்திருக்கிறது. இவர்களைப் பற்றி முதல் தடவையாக மனித நேயத்துடன் எழுதிய எழுத்தாளனைப் பேசுவதற்கு அழைக்க வேண்டுமென்று விழாக்காரர் களுக்குத் தோன்றவில்லை. ஆனாலும் அலிகளுக்கு அழகுப்போட்டி நடத்தி விழாவை விகாரமாக்கியவர்கள் அழைத்திருந்தாலும் நான் போயிருக்க மாட்டேன்.

ஏழைகளைப்பற்றி எழுதுகிற ஒரு எழுத்தாளனுக்கு பரிசு கிடைத்தாலும் அதேசமயம் அந்த ஏழைகள் முன்னேறாமல் இருப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆகையால் இந்தப் பரிசுகள் ஏழ்மையின் வெற்றியே தவிர ஏழைகளின் வெற்றி அல்ல. இதேபோல் இந்த நாவலுக்குக் கிடைத்த பரிசும், பேரும் அலித்தன்மையின் வெற்றியே தவிர அலிகளின் வெற்றி அல்ல என்றே கருதுகிறேன். இப்படிக் கருதுவதற்குக் காரணமும் இருக்கிறது. சோதனைக்குழாய் குழந்தைகள் பிறப்பிக்கப்படுகிறார்கள்.

செம்மறி ஆட்டிலிருந்து அதன் நகலான இன்னொரு செம்மறி ஆடு உருவாக்கப்படுகிறது. பெற்றோர் இல்லாமலேயே நகல் மனிதர்களை உருவாக்கும் வேண்டாத வேலையிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டி ருக்கிறார்கள். ஆனால் இதே இந்த விஞ்ஞானிகளுக்கு அலிகள் ஏன் இப்படி உருவாகிறார்கள் என்று ஆழமாக ஆய்வு செய்ய நேரமில்லை. கேட்டால் குரோமோசோம் கோளாறு என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடுவார்கள். இன்றைய விஞ்ஞான பொற்காலத்தில் இந்தக் கோளாறு களைச சரிப்படுத்த வேண்டுமென்ற மனிதாபிமானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/15&oldid=1248942" இலிருந்து மீள்விக்கப்பட்டது