பக்கம்:வாடா மல்லி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சு. சமுத்திரம்


அவர்களுக்கு இடம் கொடுத்தன. தர்மரோட குடும்பத்துக்கு, இந்த இஸ்கு தொஸ்கு தெரிஞ்சபோது, மகனை வீட்டுக்குள் பூட்டினார்கள். ஆனால், இந்தப் பூவம்மா அசரவில்லை. ஆளில்லாத சமயம், அந்த வீட்டுக்குப் போய், கள்ளச்சாவி போட்டு பூட்டைத் திறந்தாள். தருமர் தட்டிக் கேட்கப் போனபோது, அவரை ஒரு அதட்டு அதட்டி, கதவைச் சாத்தித் தாழிட்டாள். பட்டி தொட்டி பதினாறிலும், நடக்காத ஒரு மாபெரும் காதல் புரட்சியால், பிள்ளையார் சொக்காரன்களும், தருமர் சொக்காரன்களும் சொல்லோடும், கல்லோடும் மோதினார்கள். இவர்கள் சண்டை முடியுமுன்பே பூவம்மா, இருதரப்பிற்கும் ஒரு பேரனைப் பெற்றுப் போட்டாள். விஷயம் அதோடு முடிந்தது. ஆனால், பிள்ளையாரைப் பொறுத்த அளவில், அது இன்னும் முடியவில்லை. அக்கா, அக்கா என்று அவள் மேல் அவ்வளவு பாசம் வைத்திருந்தார். இப்படி ஒடிப் போகாமல் “உட்கார்ந்த” அவள், அதன்மூலம் தனது வம்சத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டாளே என்று அவருக்குக் கோபம். அது, கூடியதே தவிர குறையவில்லை. சென்ற ஆண்டு பூவம்மா, தனது மகனுக்கு, சொந்த தம்பியின் மகளை தாலி கட்ட வைத்தாள். அதிலிருந்து சொந்த பெரியப்பா மகனான, இந்தப் பிள்ளையார், அந்த பெரியப்பா மகன் கோயக்கண்ணனோடும் பேசமாட்டார்.

பின்னோக்கிச் சென்ற பிள்ளையாரின் மனத்தை வெள்ளையம்மா முன்னோக்கிச் செலுத்தினாள்.

“இப்படிக் குத்துக்கல்லா நின்னால் எப்படி? பிள்ளை துடியாத் துடிக்கான். தவியாய்த் தவிக்கான். ஒரு நட நடந்து. பூவம்மா மயினி வீட்டுக்குப் போய், வரச் சொல்லுறது. பிள்ளைய விடவா கெளரவம் வந்துட்டு.

ஆனாலும் இந்த வீறாப்பு ஆகாதுப்பா. வேற யாரு போனாலும் மயினி வரமாட்டாள். அவள் வராமல் இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/150&oldid=1249605" இலிருந்து மீள்விக்கப்பட்டது