பக்கம்:வாடா மல்லி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சு. சமுத்திரம்


“கலங்காதே பிள்ளையார். எம் மருமவனுக்குப் பிடிச்ச பீடை இன்னியோட முடிஞ்சிட்டு. சந்தையில போயி நல்ல சேலையா வாங்கு. சீதாலட்சுமி கொஞ்சம் நாகரீகமானவள் பாரு... வளையலும் ரப்பரா இருக்கட்டும்..!

வெள்ளையம்மா, ஒரு சந்தேகம் கேட்டாள்.

‘டேவிட்டுன்னா யாரு? அந்தப் பேரையே இந்த சீதாலட்சுமி சொல்றாளே! ஒருவேள கலியாணத்துக்கு முன்னால அவன வச்சுக்கிட்டு இருந்திருப்பாளோ..”

“எக்கா.இந்த மூளியை வாய மூடச் சொல்லுக்கா. யாரையும் பழி சொல்லணுமுன்னால் கூசாம சொல்லுவா!’

பூவம்மா, வெள்ளைக் கொடி பிடித்தாள்.

“ஊர்க்கதை நமக்கெதுக்கு வெள்ளையம்மா... நம்ம வரைக்கும்தான் நாம் பார்க்கணும். சீதாலட்சுமி கேட்டது எல்லாத்தையும் என் மருமவன் கையில கொடுங்க.அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை உச்சிப் பகலுல என் மருமவன் யாருக்கும் தெரியாம போயி சீதாலட்சுமி சமாதியில சேலை, துணிமணி, வளையலு, எல்லாத்தையும் வச்சுட்டு திரும்பிப் பார்க்காமலே வந்துடனும்! இதுக்கும் மீறி சீதாலட்சுமி, கட்டுப்படலன்னா இருக்கவே இருக்கு. பாதாளச் சிறை!”

15

உச்ச வெயில், உச்சியைப் பிளந்த நேரம்.

சுயம்பு, பாண்ட் சட்டை போட மறுத்துவிட்டான். அவன் போக்கிலேயே விட்டுப் பிடித்தார்கள். ஆறுமுகப் பாண்டிக்கும், அவன் மனைவிக்கும் இதில் இஷ்டமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/156&oldid=1249612" இலிருந்து மீள்விக்கப்பட்டது