பக்கம்:வாடா மல்லி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சு. சமுத்திரம்


சுயம்பு புறப்பட்டான். அண்ணிக்காரியால் தாங்க முடியவில்லை.

“சூட்கேஸை சுமந்துட்டு காலேஜுக்கு போகிற கையில துக்குப் பையும் அதுவுமா. சே!”

மருமகளை அத்திப்பூப் போல் பாசமாய்ப் பார்த்த மாமியார் வெள்ளையம்மா, அவள் தலைக்கு மேலே உள்ள ஜன்னல் வழியாகப் பார்த்தாள். அதே வைக்கப்படப்பு பக்கத்தில் கொழுந்தன் பெண்டாட்டியின் நடமாட்டம்.

“பூனக்கண்ணி.பார்க்கிற பார்வையைப் பாரு.முதல் தடவ. நான் பெத்த பிள்ளை காலேஜுக்குப் போகும் போதும், வேணுமுன்னே குறுக்கே வந்தாள். எல்லாம் வெளங்காம போயிட்டு. சுயம்பு. கொஞ்சம் தண்ணிரை குடிச்சுட்டுப் போ!’

சுயம்புவுக்கு, அண்ணன் மகன் தண்ணிர் கொண்டு வந்தான். அதைக் குடித்துவிட்டு, அவன் புறப்படப் போனபோது, பூவம்மா மயினி, மார்பைத் தட்டி, சுயம்பு வுக்குத் தைரியம் சொல்வது போல் எல்லோருக்கும் சொன்னாள்.

“திரும்பிப் பாராம போயிட்டு, திரும்பிப் பாராம வரணும் என் மருமவனே . மாரியாத்தா இப்ப என்கிட்ட இருந்து ஒங்கிட்ட வாராள். சீதாலட்சுமியும் நீங்க கொடுக்கிறத வாங்கிக்கிட அங்க தயாரா இருக்காள், ஏடா கூடம் செய்ய மாட்டியளே.”

சுயம்பு, பலமாகத் தலையாட்டிவிட்டு, வாசலைத் தாண்டினான். அவர்கள் சொல்லிக் கொடுத்ததுபோல் ஊர் வழியாகப் போகாமல், இரண்டு பக்கமும் வரிசை வரிசையாய் நீளவாக்கில் உள்ள குடிசை வீடுகளின் இடுக்கு வழியாய் நடந்தான். அநத்க் காலத்து வழக்கப்படி, மூணே முக்கால் பிடி’ இடைவெளியோடு கட்டப்பட்ட மண் சுவர்கள். அந்த இடுக்கு வழியாய்ச் சென்றவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/158&oldid=1249614" இலிருந்து மீள்விக்கப்பட்டது