பக்கம்:வாடா மல்லி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சு. சமுத்திரம்


ஆடைகளைப் பார்ப்பாளே தவிர, உடுக்கமாட்டாள் என்ற அனுமானத்தில் ஜாக்கெட்டுக்குப் பட்டன்கள் இல்லை. பாடிக்குக் கொக்கி தைக்கப்படவில்லை. நீளவாக்கிலும் அகல வாக்கிலும் மடிக்கப்பட்டு, ஒரடி நீளத்திற்கும் அரையடி அகலத்திற்கும் அதே அளவு கன பரிமானத் திற்கும் உட்பட்டுத் தோன்றிய அந்தச் சேலையை, அதிசயத்தோடு பார்த்தான். அவனுக்கும் போன ஆசை புது வீச்சோடு திரும்பி வந்தது. யோசித்தான். ஆனால் புடவையை போனவாரம் கட்டுனது மாதிரி கட்டப்படாது. எப்படிக் கட்டலாம். இந்த மலரு வரவே இல்லை. பதில் லெட்டர் கொடுக்கலைன்னு கோபம். எவள் கிட்ட கேட்கலாம்.?

சொல்லி வைத்ததுபோல், அவன் எதிரே மூன்று பெண்கள் தொலைதுார குளத்துப் பக்கத்திலிருந்து, தரை யிறங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி, துவைத்த துணி மணிகளை மார்பு வரைக்கும் கட்டிய புடவைக்கு மேல் அங்குமிங்குமாய் மடித்துப் போட்டிருந்தாள். இன்னொருத்தி, ஈரப்புடவையைக் கட்டிக்கொண்டு முந்தானையை மட்டும் விரித்துக் காயப்போட்டுக் கொண்டு வந்தாள். மற்றொருத்தி இவள்கள் மத்தியில் ஒரு கதாநாயகி, இஸ்திரி போட்ட புடவை ஜாக்கெட், அசத்தலான பார்வை. கொத்தும் கண்கள், குமிழியில்லாக் கன்னம். உருண்ட முகம். கையில் பிளாஸ்டிக் கூடை. அவை முழுக்க ஈரத்துணிகள்.

அந்த மூன்று பெண்களும், செஞ்சிவப்பு வெட்டுக் கிளிகள் மாதிரியான பூக்களைச் சுமக்கும் துவரம் பருப்புப் பயிர்கள் பளிச்சிடும் தோட்ட வரப்பின் வழியாய், ஊருக்கு அருகே உள்ள கரிசல் காட்டுப் பக்கமாக வந்தார்கள். சுயம்புவால் பொறுக்க முடியவில்லை. பெண்வாசனை கண்டு, அவர்களைப் பார்த்து ஓடினான். அவர்களே திடுக்கிட்டு நின்றுவிட்டு, அப்புறம் நடக்கும்படி ஓடினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/160&oldid=1249616" இலிருந்து மீள்விக்கப்பட்டது