பக்கம்:வாடா மல்லி.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 141


அணையவில்லை. இதனாலேயே, இவள் நாத்திகவாதி ஆகி விட்டவள்.

சுயம்பு, அவசரம் தாங்க முடியாமல் புடவையை நீட்டினான். அவள் அதை வாங்கிக்கொண்டே, உடம்பில் சுற்றவிட்டாள்.

“இந்தா பாரு சுயம்பு. சேலைல இந்த முனையை இப்படிப் பிரிச்சு தொப்புளுக்கு மேல சொருகனும். அப்புறம் இந்த மாதிரி புடவைய வலது பக்கமா இடுப்பச் சுற்றி ரெண்டு தடவ சுத்தனும்.சுத்தியாச்சா.நல்லாப் பாரு..இன்னும் மிச்சம் இருக்கிற இந்தத் துணிய.லூசா விட்டு, தோளுல போடணும். போட்டாச்சா.இதோ. இந்த மாதிரி லூசா இருக்கிற துணியை சுருக்குப் பை மாதிரி மடக்கணும். மடக்கு மடக்கா மடக்கியாச்சா. இதுதான் கொசுவம். இதையும் தொப்புளுக்கு மேல இப்படிச் சொருகனும்.எங்க உடுத்திக் காட்டு பார்க்கலாம்.”

சுயம்பு, அவளிடமிருந்து அந்தப் புடவையை பயபக்தியோடு பார்த்து, பலவந்தமாகப் பறித்தான். அவள் சொன்னதுபோலவே, ஒரு சொருகு. இரண்டு சுற்று.

அவள், திருத்தம் கொடுத்தாள். “முந்தாணி அவ்வளவு வேண்டாம்.ஆ..இப்ப சரி தான்.அந்த லூசா இருக்க துணியச் சுருக்குங்க...சபாஷ். இதுதான் பொம்பளைக்கு லட்சணம். நீ பொம்பளை மாதிரியே ஆகிட்டே.”

“பொம்பள மாதிரி என்ன தாயி... நான் பொம்பளையேதான்.”

சுயம்பு, வளையல்களைக் குலுக்கிக் காட்டினான். ‘கொலுசும் இருந்தா நல்லா இருக்கும். ஒன் கொலுசக் கொஞ்சம் தாரியாடி” என்று கேட்டபோது, சும்மா நின்றவள் பயந்தாள். புடவை டீச்சர், திருப்திப்பட்டாள்.

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/163&oldid=1249620" இலிருந்து மீள்விக்கப்பட்டது