பக்கம்:வாடா மல்லி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 143


“நீங்க மட்டும் எங்க அண்ணிய கேவலமாக்கலாமா. அவங்க இவன பேயாய் பிடிச்சிருக்கறதாயும், ஒங்ககிட்ட புடவை யாசகம் கேட்டதாயும் எப்படி கேவலப் படுத்தலாம்? இவன்கிட்ட துணிகளைக் கொடுத்து, எப்படி அனுப்பலாம். ஒருத்தி செத்தபிறகும், அவளை பழைய படியும் சாகடிக்கனுமா...”

மரகதத்திற்கு, மனம் கேட்கவில்லை. அவள் சொல்வ திலும் ஒரு அர்த்தம் உள்ளது. சுயம்புவுக்கு ஒரு நீதி, சீதாலட்சுமிக்கு இன்னொரு நீதி என்று இருக்க முடியாது. கைகளைப் பிசைந்தாள். அப்போது, தாய்க்காரி வெள்ளையம்மா ஒரு உண்மையைக் கண்டுபிடித்தது போல் கீழே குனிந்தாள். குன்னிந்தபடியே ஒன்றுவிட்ட நாத்தினார் பூவம்மாமீது மண்ணை வாரி வாரி வீசினாள். இப்போது அவள் உடம்பே மண் நிறமானது. வெள்ளையம்மாவின் கை இப்படி இயங்கிக் கொண்டிருக்கும்போதே, வாயும் இயங்கியது.

“அடுத்துக் கெடுத்தவளே! குடியக் கெடுத்தவளே! ஒம்புத்தியக் காட்டிட்டியேடி ! இந்தப் பாவி ம்னுஷன் கிட்ட இருந்த பகைக்கு, பழி வாங்கிட்டியேடி சண்டாளி: இங்கயும் சொல்லிக் கொடுத்து, அங்கயும் சொல்லிக் கொடுத்து, எங்கள கேவலப்படுத்திட்டியேடி! நீ உருப்படு வியாடி ஒன் வீட்டிலயும் இப்படி ஒண்னு முடியாதா..? கைகேயி கூனி! நீலி!”

பூவம்மா, வெள்ளையம்மா போட்ட மண்துகள்களை மாரியாத்தா போட்ட அம்மைபோல் நினைத்துக்கொண்டு வேப்பிலையை வைத்து தடவிவிட்டாள் பதட்டமாக, பிறகு அங்குமிங்குமாய் சுற்றிச் சுற்றி ஆகாயத்தைப் பார்த்து கையை ஓங்கி ஓங்கி அரற்றினாள்.

“அடி மாரியாத்தா! என்ன ஏமாத்திட்டியேடி. நீ உருப்படுவியாடி! எல்லாருக்கும் செய்யறது மாதிரிதானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/165&oldid=1249623" இலிருந்து மீள்விக்கப்பட்டது