பக்கம்:வாடா மல்லி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சு. சமுத்திரம்


“என் பெண்டாட்டி சீதாலட்சுமிய அவமானப் படுத்துனதுக்கு பிள்ளையார் மாமா, இங்கேயே பதில் சொல்லணும்! இல்லாட்டா அவர நகர விடமாட்டேன்!”

“அட விடுடே...கிராமத்துப் பழக்கம். இப்படிச் செய்தாலாவது மகனுக்கு புத்தி தெளியாதான்னு பெத்தவங்களுக்கு ஒரு ஆசைதான். விட்டுத்தள்ளுப்பா!’

“சரி, விடுடே.இந்தக் காலத்துலயும், வெள்ளையம்மா பாட்டியும் வாழத்தானே செய்யுறாக, பாட்டி மண்டையப் போடுறது வரைக்கும் இந்த மாதிரி தீட்டுக் கழிக்கறதும் இருக்கத்தான் செய்யும்!”

“ஏய் பேராண்டி! நேத்து என்கிட்ட திருநீறு வாங்கி நெத்தியில் பூசிக்கிட்டு, சீட்டு விளையாடி ஜெயிச்சத மறந்துடாதடா. நான் மண்டையப் போட்டால், ஒனக்கு ‘வெட்டுச்சீட்டே’ கிடைக்காதுடா...”

கூட்டம் லேசாய் சிரித்தது. ஆறுமுகப் பாண்டியும், அவன் மனைவி கோமளமும், மரகதம் பக்கம் போய் அவளை நாயே பேயே என்று திட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் முத்துக்குமார்தான் விட்டுக் கொடுக்கவில்லை.

“எம் பெண்டாட்டிய கேவலப்படுத்துணவங்கள நான் கேவலப்படுத்தாமல் விடமாட்டேன்!”

பிள்ளையாரால் பேசாமலிருக்க முடியவில்லை.

“பெண்டாட்டிமேல ரொம்பத்தான் ஆசை வச்சிருக்கே... அதனாலதான் அவள் சுடுகாட்டுக்குப் போன

மறுமாசமே சந்நியாசி ஆயிட்டே!”

“ஏய் பிள்ளையாரு மாமா! இப்படிப் பேசுனா உம்மீது நான் கை வைக்கவேண்டியது வரும்!”

“ஏல. நீ ஒரு அப்பனுக்குப் பிறந்தவன்னா எங்க அண்ணன் மேல கை வச்சுப் பாரு!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/168&oldid=1249627" இலிருந்து மீள்விக்கப்பட்டது