பக்கம்:வாடா மல்லி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சு. சமுத்திரம்


இருதரப்பும், கப்சிப் ஆனது. பிள்ளையார் பேச்சற்றார். முத்துக்குமார் மூச்சற்றான். ராமசாமிக் கிழவர், வெள்ளை முலாம் பூசப்பட்டது போன்ற இரும்புப் பற்கள் தெரிய குதர்க்கமாகக் கள்ளச் சிரிப்பாய் சிரித்தார். இப்படி பஞ்சாயத்து பேசி எத்தனை வருடமாச்சு...!

கலையப்போன கூட்டத்தைக் கண்டிப்புப் பார்வை யோடு பார்த்து, அவர் மற்றொரு தீர்ப்பையும் வழங்கினார்.

“இந்த சுயம்பு பயலை கூப்பிடுங்கடா.முட்டாப்பய மவனுக்கு பேரு வச்சதே நான். அவனை சபையில வெச்சு ரெண்டு வார்த்தையாவது பேசிக் கண்டிக்கணும்.”

எல்லோரும் கண்போட்டுத் தேடினார்கள். சுயம்பு இல்லை.

16

சிந்தடி சாக்கில், வீட்டுக்கு ஓடிவந்த சுயம்பு, அந்தப் பேருக்கு ஏற்ப தன்னைத்தானே புதிய வடிவத்தில் படைத்துக் கொண்டிருந்தான்.

தலையை பாப் செய்து அசல் பெண் போலவே தோன்றினான். அந்த பாப் தலையிலும் ஒரு சிவப்பு வளையம். பிடரியில் ரிப்பன் கட்டுக்கள். பிராவோடு கூடிய ஜாக்கெட். அதைப் பாதி மறைத்த முந்தானை. பாவாடை நாடா தெரிந்த சேலைக்கட்டு. ரத்தச் சிவப்பான குங்குமம். வெளியே அதிர்ந்துபோய் நின்ற அப்பாவையோ, அண்ணனையோ கவனிக்காமல், கை வலையல்களைக் கலகலப்பாக்கிக் கண்ணாடியில் இரண்டு பக்க இடுப்புக்களையும் பார்த்து, அங்குமிங்குமாய், அந்த அறைக்குள் உலவிக் கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/170&oldid=1249631" இலிருந்து மீள்விக்கப்பட்டது