பக்கம்:வாடா மல்லி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 149


ஆறுமுகப்பாண்டி அப்பாவையே பார்த்தபோது, அவர், தம் பிடித்து நடந்தார். மூச்சை மூக்கில் மட்டும் வைத்திருப்பவர் போல் முகத்தை நிமிர்த்திக்கொண்டே நடந்தார். முதுகைக் காட்டிய சுயம்புவைத் தன் பக்கமாய்த் திருப்பி, தன் முகத்துக்கு எதிராய் வைத்துக் கொண்டு, நிதானமாகக் கேட்டார். புயலுக்கு முன் வரும் ஒரு அமைதி. பதுங்கிக் கேட்டார்.

“ஏய் சுயம்பு. சேலைய அவுறுடா! ஜாக்கெட்ட கழட்டுடா !”

“மாட்டேன்!”

“ஏன் மாட்டே?” “ஏன்னா. நான் பொம்புள! கேர்ல்!” “இப்போ அவுக்கப் போறியா இல்லியா?” “மாட்டேன்! நீங்க செய்த தப்புக்கு நான் எதுக்கு தண்டனை அனுபவிக்கணும்?”

“என்ன தப்புடா செய்தேன்?” “என்னன்னு தெரியுது... எப்படின்னு சொல்லத் தெரியல!”

“தத்துவம் பேசுறியளேர. சரி, இப்போ சேலய அவுக்கப் போறியா மாட்டியா?”

“உயிர விட்டாலும் விடுவனே தவிர, சேலைய விட

மாட்டேன்!”

கூடக்கூட பதிலளித்துக் கொண்டிருந்த சுயம்பு, “எம்மா” என்று கத்தியபடியே கீழே கிடந்து, கையைக் காலை ஆட்டினான். மல்லாக்கத் துக்கிப் போட்டால் கரப்பான்பூச்சி எப்படி ஆடுமோ, அப்படி ஆடினான். இதற்குள் பிள்ளையாரின் வலது கால் சுயம்புவின் விலாவில் மீண்டும் உதைத்தது. அவன் ‘எய்யோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/171&oldid=1249632" இலிருந்து மீள்விக்கப்பட்டது