பக்கம்:வாடா மல்லி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சு. சமுத்திரம்


போனனே’ என்று வலது பக்கம் புரண்டபோது, பிள்ளையார் இடது காலால் ஒரு உதை உதைத்து அவனை இடது பக்கம் புரட்டினார். உதைத்து உதைத்து அவனை, அந்த அறைக்குள் உருட்டிக் கொண்டே இருந்தார். இதற்குள் ஆறுமுகப் பாண்டி அவனைக் கழுத்தைப் பிடித்துத் துக்கி நிறுத்தினான். அவனை அந்தரத்தில் கொண்டுபோய் நிறுத்தினான். பிள்ளையார் தீர்மானமாகக் கேட்டார்:

“சேலய அவுக்கிறியா இல்லையா? பெரியவன் நீ அவன் சேலயத் தொடப்படாது! ஒன்று அவன் சீலய அவனாவே கழட்டிப் போடணும். இல்லன்னா இந்த இடத்துலயே குழி வெட்டி அவனைப் புதைக்கணும். அவனக் கீழே போடு.”

கீழே விழுந்த சுயம்புவிடம், பிள்ளையார் அவன் இரண்டு கால்களிலும் ஒரு காலை வைத்து அழுத்திய படியே கேட்டார்.

“சேலைய கழட்டுடா...”

“நான் பொம்புள.கழட்ட மாட்டேன்!”

“கடைசியா கேக்கேன்...”

“எப்ப கேட்டாலும் சரி...”

பிள்ளையார், அந்தக் கதவைத் தாழிட்டார். அவனைப் பெறுவதற்கு முன்பு எப்படி உடம்பில் ஒரு முறுக்கு வந்ததோ, அப்படி அவருக்கு வந்தது. ஒரே எத்து, ‘எய்யோ...’ என்று சுயம்பு கீழே படுத்தான். ஆறுமுகப் பாண்டி, அவன் கழுத்தில் தன் பாதத்தை வைத்துக் கொண்டு கீழே போட்டு அழுத்தினான். அதட்டிக் கேட்டான்.

‘ஏல இப்பச் சொல்லு. இனிமேலும் சேல கட்டுவியா...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/172&oldid=1249633" இலிருந்து மீள்விக்கப்பட்டது