பக்கம்:வாடா மல்லி.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 153


சூடு போடு! இந்தக் கோலத்த பார்க்காம இருக்க என் கண்ணுல சூடு போடு!” என்றார். உடனே அவள், அந்தக் கம்பியை இன்னொரு கைக்கு மாற்றி எந்தக் கை அப்பனுக்குச் சூடு போட நினைத்ததோ, அந்தக் கையிலேயே சூடு போட்டாள். சதை சதையாய் தன்னைத்தானே பொசுக்கினாள். புகை புகையாய் சுட்டாள்.

இதற்குள், மூலையில் சாய்ந்து கிடந்த மரகதம் கத்தினாள்.

“என் உடன்பிறப்பு வாயில துரை தள்ளுதே. கையும் காலும் சும்மா கிடக்குதே! அடிச்சுக் கொன்னுட்டியளே”

சுயம்பு, சுரணையற்றுக் கீழே கிடந்தான். வாயில் நுரையும், ரத்தமும் மாறி மாறி வந்தன. ஒன்றோடு ஒன்று கலந்தும் வந்தன. மரகதம் தம்பியை மடியில் எடுத்துப் போட்டுக்கொண்டாள். அவன் கையை எடுத்தே தன் தவுையில் அடித்துக் கொண்டாள். பிறகு சுரணை பெற்று ரத்தத்தைத் துடைத்து விட்டாள். கைகால்களைப் பிடித்து விட்டாள். துடைக்கத் துடைக்க ரத்தம். பிடிக்கப் பிடிக்க சதைகள்.

வெள்ளையம்மா ஒப்பாரி போட்டாள். சுயம்புவின் முகத்தோடு முகம் முட்டி, விம்மி விம்மி பேசினாள்.

“நீ எப்படி இருந்தாலும் நான் ஒனக்கு தாய் தானடா. என் வயித்துல பொறந்தது எப்படியும் இருந்துட்டுப் போகட்டுமே.ஒங்களுக்கு என்ன வந்துட்டு. என் ராசா.என் சீமைத்துரையே..என் செவ்வரளிப் பூவே.ஒன்னக் கொல்லு கொல்லுன்னு கொன்னுட்டானுவளே..நீ பிழைப்பியாடா...”

அப்பனும், மகனும், சுயம்புவையே பார்த்தார்கள். அவனுக்கு லேசாய் தெளிவு வந்தது போல் கண் திறந்ததும் இருவரும் அந்த அறையை விட்டு வெளியேறினார்கள். திண்ணையில் ஆளுக்கு ஒரு பக்கமாகச் சுவரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/175&oldid=1249637" இலிருந்து மீள்விக்கப்பட்டது