பக்கம்:வாடா மல்லி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சு. சமுத்திரம்


சாய்ந்தார்கள். வீட்டுக்கு வெளியே வேப்ப மரத்தடியில் ஒரே கூட்டம். உள்ளே வர யோசிக்கும் கூட்டம். முற்றத்தில் தம்பி சண்முகம். பக்கத்தில் அவர் மனைவி. உள்ளே இப்போது மரகதம், தம்பிக்கு உபதேசிப்பது கேட்டது. சரி, நீ எடுக்காட்டாலும் என்னயாவது எடுக்க விடு, என்ற யாசகப் பேச்சு! விம்மல்! வெடிப்பு: இப்படித் தான் நல்ல பிள்ளையா நடந்துக்கனும் என்ற முடிவுரை.

பிள்ளையாருக்கும் லேசாய்த் தெளிவு. முற்றத்தைப் பார்த்தார். பத்தாண்டு காலப் பகை போய், சின்ன வயதிலாடிய தெல்லாங்குச்சி ஆட்டமும், கிளித்தட்டு விளையாட்டும் மனத்தில் வியாபித்தன. தம்பியைப் பார்த்துக் கத்தினார்.

“ஏலே சண்முகம்.ஒன் வீட்டுக்குள்ள வாறதுக்கு யாரு கிட்டடா யோசனை கேட்கணும்...இதுலதான்டா நீ பொறந்தே.”

சண்முகம், மனைவியோடு திண்ணைக்கு வந்தார். அண்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அலறினார். பிள்ளையார் தம்பியின் தலையை வருடிவிட்டபடியே தழுதழுத்த குரலில் பேசினார்.

“ஒருத்தன இழந்துட்டாலும், இன்னொருத்தன வாங்கிக்கிட்டேன்! அந்தவரைக்கும் சந்தோஷம் ! வயசானாத்தான் புத்தியே வருது: ருக்குமணி-உள்ளே போயி நீ சேனை கொடுத்த உன் மகனோட அலங்கோலத்தப் பாரும்மா...எந்த நேரத்துல பெத்தேனோ...”

வெளியே நின்ற வேப்பமரத்தடிக் கூட்டத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்டது. அந்த சத்தத்திற்குரியவர் உள்ளே வந்தார். ராமசாமிக் கிழவர்.

“ஒக்காரும் மச்சான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/176&oldid=1249639" இலிருந்து மீள்விக்கப்பட்டது