பக்கம்:வாடா மல்லி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆய்வுரை

டாக்டர் பேராசிரியர் இராம. குருநாதன்

ஒரு குடும்பத்தில் ஒருவனோ, ஒருத்தியோ அலியாக மாறுகிறார்கள் என்பதைக் கண்முன் கொண்டு வருவோம்! அக்குடும்பம் என்ன பாடுபடும்? - நெல்லுல சாவியாகி, முட்டையிலே கூமுட்டையாகி ஆணிலேயும் சேராமல் பெண்ணிலேயும் சேராமல் அலியாகிப்போன இளைஞன் ஒருவனின் கதைதான் இது.

வண்ணமும் வடிவமும் (:) இருந்து உயிர்ப்பு அற்ற காகித மலர்களாக உலவும் அலிகளின் அவல வாழ்வு வித்தியாசமான பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது.

அலிகள், ஆண்பாலா? பெண்பாலா? இவர்களை எப்பாலில் கூறுவது?. எத்தினையில் கூறுவது? என்ற ஆராய்ச்சி மிகப் பழங்காலத்தில் நிலவி வந்துள்ளது. இவர்களை உயர்திணையில் கூறுவது பால் வழுவமைதி: சேனாவரையர் பெண்மை திரிதலும் உண்டேனும், ஆண்மை திரிதல் பெரும்பான்மை’ என்று தொல்காப்பியத் தொடர் ஒன்றிற்குப் பொருள் விரிப்பர். பெண்மை குறைந்து, ஆண்தன்மை மிக்கதை அலி என்ற சொல்லாலும், ஆண்தன்மை குறைந்து பெண்தன்மை மிக்கதைப் பேடி என்ற சொல்லாலும் குறிப்பர்.

கூத்துக்களில் ஒருவகையான பேடிக்கூத்து பற்றிச் சிலப்பதிகாரம் கூறுகிறது. ஆண்மை திரிந்த பெண்மைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/18&oldid=1248946" இலிருந்து மீள்விக்கப்பட்டது