பக்கம்:வாடா மல்லி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 159


“ஒரு நாளும் அடிக்காத உடன்பிறப்ப அடிச்சு நொறுக்கிட்டேன். என் கையால இடுப்பில தூக்கி வளர்த்த பயலுக்கு இடுப்புலய சூடு போட்டுட்டேன். இனிமேல் அவன் எங்க தேறப்போறான்... எனக்கு என்னவோ சந்தேகமாகவும் இருக்கு. பயமாகவும் இருக்கு. நாளைக்கே நர்ஸிங்ஹோம்ல சேர்க்க முடியாதுதான். ஆனால் எவ்வளவு ரூபா ஆனாலும் சரி. முடிவு தெரியற வரைக்கும் பார்த்துட வேண்டியதுதான். பால் பொங்கி வரும்போது பானை உடைஞ்சிட்டு. என்ன பேச மாட்டங்க...”

“பேசறதுக்கு என்ன இருக்கு. யார் யாருக்கு எது கொடுத்து வச்சிருக்கோ அதுதான் நடக்கும். எழுதாக் குறைக்கு அழுதா முடியுமா: ஆமா, ஒங்க பரம்பரையில வேற யாருக்காவது இப்படி வந்திருக்கா?”

“எனக்குத் தெரிஞ்சு இல்ல!” “எதுக்காக இக்கன்னா போட்டுப் பேசlங்க?” “காரணம் இருக்கு. ஒரு மனுசனோட பரம்பரய நினைச்சுப் பார்த்தால், அதுவே ஆதி அந்தம் இல்லாதது. என் தகப்பன்வழித் தாத்தா, தாய்வழித் தாத்தா, அந்த தாத்தாக்களோட தாய்வழித் தாத்தா, தகப்பன் வழிப் பாட்டி. நெனச்சுப் பார்த்தால், உலகம் முழுசுலயும் நாம ஏதோ ஒரு வகையில, ஒரு கிளையில, ஒரு இலையா இருப்போம்! ஆனால், நமக்குத்தான் நம்ம தாத்தாவுக்கு மேல யாருமே தெரியாதே ! மிஞ்சிப் போனால் பூட்டி. நம்ம வேரை நாம தேடுறதே இல்ல!”

“என்ன நீங்க பொம்புள மாதிரிப் புலம்பறிய!”

“இதுக்குப் பேரு புலம்பலா. பொம்பளன்னாலும் ஆம்பளன்னாலும் மனசு ஒண்ணுதானம்மா.”

“அம்மா. அம்மா.. எப்பப் பார்த்தாலும் நான் ஒங்களுக்கு அம்மாதான்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/181&oldid=1249650" இலிருந்து மீள்விக்கப்பட்டது