பக்கம்:வாடா மல்லி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 161


அவன், அவளை மனதுக்குள் பாராட்டினான். ‘பிடித்த உடனேயே எதிர்ப்பிடி போடுபவள், சுயம்பு மைத்துன னுக்கு ஏற்பட்ட கோளாறால். அந்த உணர்வே அற்றுப் போனாள்! பாசக்காரி.

ஆறுமுகப்பாண்டியால், துரங்க முடியவில்லை. அவனை ஆறுதல் செய்தும் ஆற்றுப்படுத்தியும் பேசும் மனைவியையும் பேசாமல் விட்டுவிட்டான். மீண்டும் அவனுக்குத் தம்பியின் நினைவு வந்தது. அடித்த கையும், உதைத்த காலும் துடித்தன. முடியாத ஒன்றை முடிவாக்க நினைத்தபோது, அந்தப் பயல் எப்படித் துடிச்சானோ. எப்படித் தவிச்சானோ. இந்த மாதிரி சமயத்தில் எல்லாப் பயல்வளும் திட்டுறது மாதிரி அவன் ஒரு வார்த்தை திட்டுனானா. இல்லியே! இல்லியே!

ஆறுமுகப்பாண்டி வாய்விட்டே புலம்பினான்.

“என் தம்பிக்கு அண்ணனாகாமே போயிட்டேனே. போயிட்டேனே.”

கோமளம், பொறுமை இழந்தாள். திரும்பிப் படுக்காமலே கேட்டாள்.

“மொதல்ல பொண்டாட்டிக்கு புருஷனா இருக்கோ மான்னு எண்ணிப் பாருங்க!”

ஆறுமுகப்பாண்டி எழுந்து உட்கார்ந்தான். அவள் முகத்தை எடுத்து மடியில் போட்டுக்கொண்டே கேட்டான்:

“நீ எதையோ மூடு மந்திரமா பேசுறியே. என்ன விஷயம்.”

கோமளம், அந்த மூடு மந்திரத்தை சொல்லாக்கி விட்டாள். அவன் செல்லாக்காசாய் ஆனதுபோல் மரத்துப் போனான். மரித்துப்போனான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/183&oldid=1249652" இலிருந்து மீள்விக்கப்பட்டது