பக்கம்:வாடா மல்லி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 163


வாடகை மட்டும் நாளுக்கு நாற்பது ரூபாய். சிகிச்சைக்குத் தனிப்பணம், மருத்துவமனை நிர்வாக டாக்டருக்கோ அவனது சகாக்களுக்கோ சைக்யாட்ரிஸ்ட்டிடம் அவனைக் காட்டவேண்டும் என்ற எண்ணமோ அவனைப் பேச விட்டுக் கேட்க வேண்டும் என்ற தொழில் அக்கறையோ வாங்கிய பணத்தில் ஒரு சதவிகித அளவிற்குக்கூட வரவில்லை.

சுயம்பு, அந்தச் சேலை கட்டி ரகளை நடத்திய மறுநாளே சேரவில்லை. மரகத்திற்கு என்று வைக்கப்பட்ட பணத்தை எடுக்க கறார் பேர்வழியான பிள்ளையாருக்குப் பிடிக்கவில்லை. அதோடு, நாட்டு வைத்தியம் பார்த்தார்கள். தலைக்குத் தைலம், வாய்க்கு அரிஷ்டம், கையில் ஒரு தாயத்து... யாராவது செய்வினை வைத்திருப்பார்கள் என்று ஒரு பூஜை. அப்படியும் இப்படியுமாய் ஒரு தோட்டத்தை அடகு வைத்து, இருபது நாட்கள் கழித்தே அவனை இங்கே சேர்த்தார்கள். இங்கே வந்து ஒரு வாரமாகிவிட்டது. அப்பா ஒரு தடவை வந்தார். அண்ணன் பலதடவை வந்தான். மோகனா வெளியே நின்றே பார்த்துவிட்டுப் போய்விட்டாள். அக்கா வர முடியாது. அண்ணி வரவில்லை.

சுயம்பு, அந்தக் கல்யாண அழைப்பிதழை மாறி மாறிப் படித்துவிட்டான். கொல்லனுரர் ராமசாமியின் சத் புத்திரன் மலைச்சாமிக்கும், நல்லாம்பட்டி பிள்ளையார் மகள் செளபாக்கியவதி மரகதத்துக்கும், பெரியவர்கள் நிச்சயித்த திருமணம். வருகையை விரும்புவோர் என்ற பட்டியலில் சித்தப்பா, சித்தி, சண்முகம், ருக்குமணி பெயர். நிலக்கிழார் என்ற பட்டத்தில் ஆறுமுகப்பாண்டி சுயம்பு என்ஜினியராம். அழைப்பிதழின் முகப்பில், அண்ணன் ஆதி நாராயணன் தங்கை ஆதிபராசக்தியை எல்லாம் வல்ல ஈஸ்வரனுக்கு சந்திரர்.சூரியர் சாட்சியாய் கைபிடித்துக் கொடுக்கும் டபுள் கலர் காட்சி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/185&oldid=1249653" இலிருந்து மீள்விக்கப்பட்டது