பக்கம்:வாடா மல்லி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 165


உதடுகள் பூவாய்ப் பிரிஞ்சுது. வாய்ச்சொல்லுக்கே இப்படிச் சிரித்த அக்காவே...ஒன்ன, அந்த அழகு மாப்பிள்ள பக்கத்திலே இருத்தி, நீ சிரிக்கிற சிரிப்பை நான் பாக்காண்டாமா...அக்கா...நான் இல்லாம ஒனக்குக் கலியாணமா...?

சுயம்பு உள்ளே இருக்க முடியாமலும் வெளியே போக முடியாமலும், அந்த அறைக்குள், சுற்றிச் சுற்றி வந்தான். காலில் ஸ்பீடா மீட்டர் கட்டி அது செயல் பட்டால் இருபது கீலோ மீட்டர் வேகத்தையும், முப்பது கிலோ மீட்டர் தூரத்தையும், காட்டியிருக்கும். திடீரென்று அவன் கால்களை அரைச் சுற்றாக்கி நின்றான். வாசலுக்குள் ஒரு காலும், வெளியே ஒரு காலுமாய் ஒருத்தி ஒதுங்கி நின்றாள். முப்பது வயது இருக்கலாம். உருண்டு திரண்ட மார்பகம். லட்சணக் கருப்பி, காதில், வெள்ளை வளையங்கள்.

அவள், அவனை ஒரு அபூர்வப் பொருளாகப் பார்த்தாள். கட்டிய பூவைத் தலையில் கட்டப்போவது போல் பார்த்தாள். லேசாகச் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தாள். ஏனோ தெரியவில்லை...அவனுக்கும் அவளருகே ஒரு சுகம்.ஏதோ ஒன்று இருவருக்கும் பொதுவாக நின்று, ஒருவரை ஒருவர் ஈர்க்கும்படி செய்தது. சுயம்பு கேட்டான்:

“நீங்க யாருக்கா?”

“பெறந்தது இந்த டவுனுதாம்பா...ஆனா பத்து வயசிலேயே ஒடிப்போயிட்டேன். ஏன் அப்படிப் பாக்கே தனியாத்தான் ஒடினேன்! நீ இனிமேல் செய்யப் போறத நான் அப்பவே செய்தேன். இருபது வருஷத்துக்கு மேல ஆயிட்டுது. அம்மாவப் பார்க்க ஆசை. உயிரோட இருக்காங்க. ஒருத்தர் கழுத்த ஒருத்தர் கட்டிப் பிடிச்சு அழுதோம். ஆனாலும் அங்க வீட்ல இருக்க முடியாத நிலமை. இங்க வந்து, சும்மானான்னாலும் காலுல முள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/187&oldid=1249655" இலிருந்து மீள்விக்கப்பட்டது