பக்கம்:வாடா மல்லி.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சு. சமுத்திரம்


குத்திட்டுன்னு சொன்னேன். அதை எடுக்கணும்னேன். அதுக்கு முன்னாலே, அதாவது அந்த முள்ளை எடுக்கு முன்னால.ரத்தத்தை டெஸ்ட் செய்யணுமாம்..இன்னும் என்னெல்லாமோ செய்யனுமாம். எனக்கும் வசதியாப் போச்சு..இங்கதான் இருக்கேன்.”

“நீங்க எந்த ரூமு.” “ஒம்போது.” “ஒட்காருங்கக்கா. ஒங்ககூட ஆண்டாண்டு காலம் பழகுனது போல தோணுது:”

“எம்மாடி. ஒன் ஒரு சொல் போதும்.ஆமா ஒன் கோளாறு இப்ப எப்படி இருக்கு?”

சுயம்பு அந்தப் பெண்ணையே வைத்த கண் வைத்த படிப் பார்த்தான். அவள் அவனை உடம்பிற்குள்ளும் உள்ளத்திற்குள்ளும் ஊடுருவதுபோல் பார்த்தாள். அவன் முகத்தில் சின்னச் சின்ன கரடுமுரடுகள். அவளைப் பார்த்ததும் ஏதோ இலக்கை அடைய முடியவில்லை யானாலும், அடையாளம் கண்ட திருப்தி,

அவள் அவன் தோளில் கை போட்டு, ஏதோ பேசப் போனாள். அவனும் தனது கஷ்டங்களை, நஷ்டங்களை கண்ணிரும் கம்பலையுமாய் சொல்லப் போனான். இதற்குள் ஒரு பின்தலைக் கைக்குட்டை. அவளை விரட்டியது.

“ஒன் ரூமுக்கு நான் வந்தால், நீ இங்க இருக்கியே. போம்மா.பெரிய பெரிய டாக்டருங்க வருகிற சமயம்.”

“ஒனக்கு வசதிப்படும்போது, ஒன்பதாம் நம்பருக்கு வா...ஒன்கிட்ட நிறைய பேசனும்!”

சுயம்பு தலையாட்டினான். நர்ஸம்மா, ஒப்புக்கு அவனையும், தின்கிற உப்புக்கு மெடிக்கல் தாளையும், உப்பு சப்பில்லாமல் பார்த்துவிட்டுப் போய்விடடாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/188&oldid=1249657" இலிருந்து மீள்விக்கப்பட்டது