பக்கம்:வாடா மல்லி.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சு. சமுத்திரம்


விட்டு, பாண்டை மாட்டிக்கொண்டு, முழுக்கைச் சட்டையையும் இன்செய்து கொண்டு புறப்ப்டடான். “அதிக நேரம் இருக்கப்படாது. தாலி கட்டுன உடனேயே ஓடி வந்துடனும்.அந்தப் பயல்வளையும், டேவிட்டையும் இங்கே வரச் சொல்லணும்.கையில்தான், அண்ணன் கொடுத்த ரூபா இருக்கே..இங்கேயே ஹோட்டலுல வாங்கி கலியாணச் சாப்பாட்டைப் போட்டுடலாம். டேவிட்டுக்கு, என்ன பிடிக்கும்னு முதல்லேயே கேட்டு வச்சுக்கணும். அவரு பக்கத்துல இருந்தே நானும் சாப்பிடணும்.”

சுயம்பு கதவைப் புத்திசாலித்தனமாய் உள் தாழ்ப் பாள் போட்டதுபோல், இடைவெளி இல்லாமல் இறுகச் சாத்தினான். வெளித் தாழ்ப்பாள் போடாமலே, புறப்பட்டான். அந்த மருத்துவமனைக்கு முன்னால் வந்து நின்ற ஐந்து நிமிடத்தில் அந்தப் பட்டிக்காட்டுக்குப் போகும் டவுன் பஸ் வந்துவிட்டது. ஏறிக்கொண்டான். ஒரு ரூபாய் ஐம்பது பைசா டிக்கெட்.

18

அவன் அந்த ஊர்ப்பாதை வழியாய் நடந்து, கருவேல மரக்காட்டைத் தாண்டி, அதே இடுக்கு வழியாய் வீட்டுக்கு வந்தபோது

வேப்ப மரத்தடியில் ஒரே ஆண்கள் கூட்டம். தென்னங்கீற்றுக் கொட்டகை. வீட்டுக்குள், பெண்கள் கூட்டம். முற்றத்தில் பெரிய பந்தல், சலவைத் தொழிலாளி கொடுத்த வெளுக்கப்போட்ட சேலைகள் மேலே உள்ள கீற்றுக் கொட்டகை ஒலைகளை மறைத்துக் காட்டின. பந்தலுக்குள்ளேயே ஒரு குட்டிப்பந்தல், விழா மேடை மாதிரியான ஜோடிப்புகள், கலர் பல்ப் தோரணங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/190&oldid=1249659" இலிருந்து மீள்விக்கப்பட்டது