பக்கம்:வாடா மல்லி.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 171


கொண்டிருந்தது. மணப்பெண் மரகதத்தை, பெண்கள் கோயிலுக்குக் கூட்டிப்போனபோது, அப்படிக் கூடவே போகாதது, சுயம்புவுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. இந்த அறையையும் அறைக்குள் இருப்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு பெரிய பொறுப்பு. யாரையும் உள்ள விடக் கூடாது. டேவிட் வந்தாலும்கூட. டேவிட் நீங்க வருவீங்களா.. அக்காகிட்ட ஒடிப்போய் டேவிட் லெட்டர் போட்டாரான்னு கேட்கலாமா... வேண்டாம், அக்கா தப்பா நினைப்பாள். சந்தேகப் படுவாள்.

சுயம்புவிற்கு டேவிட்டை நினைக்க நினைக்க பாலை வனம், பசுஞ்சோலையானது. கண்கள் தானாய்க் குளிர்ந்தன. பற்கள் உதடுகளைத் தேனாய்க் கவ்வின. அந்த அறையை அவன் உற்றுப் பார்த்தான். அதோ அக்காவின் நிச்சயதாம்பூலப் புடவை. டேவிட்டுக்குப் பிடித்த வெளிர்

மஞ்சள் கலர்.

சுயம்பு சிறிது யோசித்தான். ஆனாலும் டேவிட்டை நினைக்க நினைக்க அவன் உடம்பை அடக்கிய ஒன்றை, அடக்கப்பட்ட ஒன்று அடித்துப் போட்டு விட்டது மாதிரி தோன்றியது. அடக்கப்பட்ட மண்ணின் மைந்தர்கள், பீறிட்டு எழுந்தால் எப்படியோ அப்படி, சிவனே என்று உள்ளே கிடக்கும் தீக்குச்சி உரசப்பட்டால் எப்படி “சக்தி’ வெளிப்படுமோ. அப்படி. கதவைச் சாத்திக் கொண்டான். தாளிட்டால் தப்பாய் நினைப்பார்கள். கொஞ்சநேரம் வரைதான். அக்காவும் அவள் பட்டாளமும் உதிரமாடன் கோயிலுக்குப் போய்விட்டு வீடு திரும்ப அரைமணி நேரம் ஆகும். இது பத்து நிமிட வேடம்.

சுயம்பு புடவையை மட்டும்தான் கட்ட நினைத்தான். ஆனாலும், அந்தப் பாவாடை, அது உடம்பில் பட்டாலே ஒரு சுகம். பாண்டுக்கு மேலே கட்டிக்கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/193&oldid=1249662" இலிருந்து மீள்விக்கப்பட்டது