பக்கம்:வாடா மல்லி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சு. சமுத்திரம்


ஜாக்கெட் இல்லாத ஒரு பாவாடையா. பிரா இல்லாத ஒரு ஜாக்கெட்டா. சுயம்பு பெண்ணாகிவிட்டான். பீரோ கண்ணாடியைப் பார்த்து குங்குமமிட்டுக் கொண்டான். அப்படிக் குங்குமம் இட்ட தன் சொந்தக் கையையே டேவிட்டின் கையாகப் பாவித்துக்கொண்டான். வளையல் கிடைக்குமா என்று அங்குமிங்குமாய் நோட்டமிட்டான். அதற்குள்

அந்த அறையின் கதவு ஒரேயடியாய் திறக்கப்பட்டது. ஒரே பெண் பட்டாளம். வெளியூர் வாடை ஆனந்தக் கூத்தாய்ப் பேசினார்கள். ‘பொண்ணு ரொம்ப ரொம்ப அழகா இருக்கே, அண்ணன் கொடுத்து வச்சவரு. ஆனால் தலை ஏன் இப்படி மொட்டையாய். முடி ஏன் அப்படி? ஒருத்தி கேட்டாள். “மயினி கொஞ்சம் பின்னால திரும்புங்க!”

சுயம்பு அப்படியே திகைத்து நின்றான். மலைப் பாம்பின் கொலைகாரக் கண்ணுக்குக் கட்டுப்பட்டு அப்படியே நிற்கும் இரை மாதிரி நின்றான். முன்னாள் பிள்ளைத்தாய்ச்சியை, குழந்தையும் இடுப்புமாய்ப் பார்த்தான். அவளோ, கல்யாண மாப்பிள்ளையான அண்ணன் சொன்ன சில சந்தேகங்களை மனத்தில் திருப்பிக்கொண்டு, அதே சமயம், அவசரப்படக்கூடாது என்று சில சந்தேகங்களைக் கேட்டாள்.

“நீங்கதான் மணப்பெண்ணா?” “இல்ல, பொண்ணுக்குத் தங்கச்சி.” “பேரு...” “பேரா. பேரு.” அவனுக்கு, உடனடியாய் பொய் சொல்லத் தெரிய வில்லை. அவளோ, அவனருகே பேயாகப் போனாள். மற்றப் பெண்கள் தடுத்தும் கேளாமல், அவன் கரண்டைக் காலில் நீட்டிக்கொண்டிருந்த ஒன்றைப் பார்த்துவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/194&oldid=1249663" இலிருந்து மீள்விக்கப்பட்டது