பக்கம்:வாடா மல்லி.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 173


அவன் சேலையை உரிந்தாள். பாவாடையோடு நின்றவனைப் பார்த்தாள். அந்தப் பாவாடைக்கு மேலே பெல்ட் போட்ட பேண்டின் வட்டம். கீழே அதே மாதிரியான, இரண்டு சின்ன வட்டங்கள். ஆரம்பத்தில் அவள்கூட கத்தப்போனாள். ஆனாலும் நிதானப்பட்டாள். அலறியடித்து அமர்க்களம் செய்யப்போன பெண்களை, பேசாமலிருக்கும்படி ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்து, அவர்களோடு வெளியேறினாள். கூட வந்தவர்களை மீண்டும் பேசாதீர்கள் என்பது மாதிரி சைகை செய்தாள். அண்ணன் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு.

சுயம்பு சிறிது நேரம் புரியாமல் விழித்தான்; பிறகு அவசர அவசரமாய் சேலையை மடித்து வைத்துவிட்டு, பாண்டைப் போட்டுக்கொண்டே சட்டையையும், மாட்டிக் கொண்டு வெளியே வந்தான். திண்ணைப்பக்கம் அவள்களின் முதுகுகளைப் பார்த்து, “நான் மரகதக்கா தங்கச்சி, சுயம்புவுக்கும் தங்கச்சி. சில சமயம் பாண்ட் போடுவேன். சில சமயம் சேலை கட்டுவேன். ரெண்டுமே பிடிக்கும்” என்றான். காலதாமதமான பொய். பிள்ளைத் தாய்ச்சி காலம் கடத்த விரும்பவில்லை. சுயம்புவைப் பார்த்துச் சிரித்தாள். “அங்கே போய் இருக்கோம்” என்றாள். அவனையே வெறித்துப் பார்த்த சந்திராவின் பின்னலைப் பிடித்து இழுத்தபடியே வெளியேறினாள்.

சுயம்புவுக்கு அவர்களைச் சமாளித்துவிட்ட திருப்தி, அவர்களுக்குத் தான் ஒரு நாகரிகப் பெண்ணாக தோன்றுவதில் ஒரு சந்தோஷம். அரைமணி நேரத்தில்

அந்தப் பந்தல் முழுக்க ஒரே சத்தம். இன்னது என்று தனித்துப் பிரிக்க முடியாத சந்தைச் சத்தம். அதையும் மீறிய வெள்ளையம்மாவின் ஒப்பாரிச் சத்தம். ஆறுமுகப் பாண்டியின் கத்தல், கதறல், அதே ராமசாமிக் கிழவர்

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/195&oldid=1249664" இலிருந்து மீள்விக்கப்பட்டது