பக்கம்:வாடா மல்லி.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சு. சமுத்திரம்


கழுத்துக்குக் குறி வைத்தான். இரண்டுபேர் வந்து பிடித்துக் கொண்டார்கள்.

சுயம்பு அக்காவைப் பார்த்தான். அவளோ எங்கேயோ நிற்பதுபோல் நின்றாள். ‘எக்கா என்று வாய் முட்ட வந்த வார்த்தையை மீண்டும் நெஞ்சுக்குள் முட்டி மோதவிட்டு, அவன் வெளியே ஒடினான். திக்கறியா, திசையறியா இடத்துக்கு. மனித வாடையே இல்லாத காட்டுக்கு.

19

சுயம்பு அந்த ஒன்பதாம் எண் அறைக்குள் ஒரேயடி யாய்ப் போவதுபோல் போனான்.

அவன் மருத்துவமனையை விட்டுப் புறப்படுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்புவரை, அவனை அன்பொழுகப் பார்த்த அதே அவள், இப்போது உலரவிட்ட தலைமுடியை ஒருசேர பிடித்தபடியே அவனைப் பார்த்தாள். எழுந்து, அவன் அருகே போய், அவன் கையைப் பிடித்து ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாள். அந்தத் தீண்டலே அவனுக்கு ஒரு சுகமாக இருந்தது. அவளோ, அவன் அலங்கோலத்தையும், சதைச் சிதைவுகளையும் துக்கத்தோடு பார்த்துவிட்டுப் பரபரத்தாள். ‘அய்யய்யோ என்ன கொடுமைடி என்று அரற்றியபடியே, மலைத்து நின்றாள். அவனிடம் ஆறுதலாகப் பேசுவதற்கு மாறி மாறி முயற்சித்தாள். முடியவில்லை. வார்த்தைகளே பனிக் கட்டிகளாகி, கண்கள் வழியாகக் கசியப்போவது போன்ற

அவன் செம்பட்டை மீசை வைத்துக்கொண்டது மாதிரி நீளவாக்கிலான ரத்தக்கோடு. கழுத்தில் ரத்த உழவுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/198&oldid=1249667" இலிருந்து மீள்விக்கப்பட்டது