பக்கம்:வாடா மல்லி.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 177


தடயங்கள். கீழே இருக்கிற மண் மேலே வருமே, அப்படி சதை தெரிந்தது. தோள்பட்டை துணி கிழிந்து, ரத்த உரைச்சலில் உறைந்து கிடந்தது. அந்தக் கம்பைப் பதிய வைத்த சின்னச் சின்னத் தடயங்கள். உச்சந்தலை கருப்பு முடியும், ஒரு சிவப்பு நிறம், உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதோ ஒரு பாதிப்பு. கண்களிலும் அது இருக்க வேண்டும் என்பதுபோல், அது நீரைச் சுரந்தது.

அவள் கதவை நிதானமாக, வெளியே எட்டிப் பார்த்துச் சாத்தினாள். ஏதோ பேசப் போனவளை, வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு, அவன் சட்டையைக் கழட்டினான். முதுகில் ரத்தத் திரவத்தோடு ஒட்டிக்கொண்டிருந்த, சட்டைத்துணி வர மறுத்தது. அவள் அதைப் பிய்த்தெறிந்தாள். ஏற்கனவே இற்றுப் போயிருந்த பணியனை அற்றுப் போட்டுவிட்டு, பாண்டையும் கழற்றி, அவனை ஜட்டியுடன் நிறுத்தினாள். கட்டிலில் வைத்த பனியன் குவியலை, ஒன்று திரட்டி ரத்தக் குவியல்களைத் துடைத்தாள். ரத்தக்கோடுகளை அதன் ஒரங்களில் துடைத்துவிட்டாள். அவனைக் கீழே குனித்து தலையின் ரத்தக் கசிவைப் போக்கினாள். அவன் வாதையை மெல்வ. போல் பல்லைக் கடித்தான். -

அவள் வெளியே ஓடினாள், கதவைச் சாத்தினாள். அவன் கதவைத் தட்டியபோது அதை மெல்லத் திறந்து ‘சத்தம் போடாத. மருந்து வாங்கிட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு, யாரோ கீழே உருட்டி விட்டது போல் படி வழியாய் ஓடினாள். நல்லவேளை... அப்போதுதான் மருந்துக்கடை பாதி மூடப்பட்டது. அந்தக் கடை அந்த மருத்துவமனை டாக்டர்களின் சீட்டுக்களிலில்லாமல், மருந்து மாத்திரை கொடுக்காத கடை. ஆனாலும், இவள் கெஞ்சிய கெஞ்சலில், டிஞ்சரைக் கொடுத்தது. வெட்டுக் காயம் என்றவுடன், தன்னை டாக்டராக அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/199&oldid=1249668" இலிருந்து மீள்விக்கப்பட்டது