பக்கம்:வாடா மல்லி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii

அவனுள் ஏற்படும் பாலின மாற்றத்தினுள்டே விரியும் நிகழ்ச்சிகளாகச் சித்திரித்துக் காட்டுவதில் வெற்றி பெற்றுள்ளார் படைப்பாளர்.

கல்லூரியில், ஆண்களின் வேங்கைத்தனமான உடம்பை வேட்கைத் தனமாய் வேடிக்கையோடு பார்ப்பதும், பெண்களோடு பெண்ணாக ஒட்டி நிற்பதும் சுயம்புவை அலியாகவும், பெண்மை அவாவும் பேடி யாகவும் (Hermaphrodite) ஆகிய இரு நிலைகளுக்கும் ஆளானதைக் காண முடிகிறது. கிராமத்துப் பெண்கள் பார்வையில் பொம்பளைக் கள்ளனாகவே தெரிகிறான் சுயம்பு.

பெண்மையைச் சிறையிட்ட, ஆண் உடம்பு பூண்ட சுயம்புவின் வாழ்க்கை நடப்பியல்படக் கூறப்பட்டுள்ளது. சுயம்பு சேலை கட்டிப் பார்ப்பதும், தன்னை பொம்பளை எனக் குடும்பத்தாரிடம் கூறிக்கொள்வதும்-அக்குடும்பத் தில் ஏற்பட்ட ஒரு மகாராஷ்டிர பூகம்பம்.

சுயம்புவை விரும்பும் உறவுப் பெண்ணிடத்துக்கூடக் காதலைப் பேசாமல், நெற்றிவகிடு எடுப்பது, சேலை கட்டுவது ஆகிய இவற்றையே பேசித் தன்னை அவள் இனமாகக் கருதுவதும், கல்லூரி நண்பன்ான டேவிட்’ டிடம், சுயம்பு, கைக்கிளை உணர்வு கொள்வதும், சகோதரி திருமணம் நடக்க இருந்த சூழ்நிலையில் கதவைத் தாழிட்டுக்கொண்டு யாருக்கும் தெரியாமல் சேலை கட்டிக்கொள்வதும், நகைகள் அணிந்துகொள்வதுமான அவனுடைய அகப்புற மாற்றங்கள் பாலின மாற்றத்தை மெல்ல மெல்ல வெளிப்படுத்துதற்கான அறிகுறிகள். இவற்றின் எதிரொலியாக, தன் சகோதரிக்கு நடக்க இருந்த மணநாளன்று, மணமகன் வீட்டாரிடம் தன்னைப் பெண்ணுக்குத் தங்கச்சி என்று பறைசாற்றிக் கொண்டவன். அவர்களிடம், சில சமயம் பேண்ட் போடுவேன்; சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/20&oldid=1248948" இலிருந்து மீள்விக்கப்பட்டது