பக்கம்:வாடா மல்லி.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 179


அவன், தலையைத் துக்கப் போனான். ஏதோ பேசப் போனான். அவள் ஒரு கையை அவன் தலையில் வைத்துக் கொண்டு, இன்னொரு கையால் அவன் உதடுகளை ஒட்ட வைத்தாள். தலையணையை எடுத்து அவன் தலைக்கு அணையாக்கினாள். பின்னர், அந்தத் தலையைத் தன்பக்க மாகத் திருப்பி வைத்துக்கொண்டே சில கேள்விகள் கேட்டாள்.

“ஒன் பேரென்ன?”

“சுயம்பு “சுயம்புன்னா தானாய் முளைத்த லிங்கம்னு பேரு. அதுக்கு எந்த அபிஷேகமும் கிடையாது!”

அவள், எதையோ யோசிப்பதுபோல் தலையை வேறு பக்கமாய்த் திருப்பினாள். அவன், அந்தத் தலை போன பக்கம் கண்களைச் சிரமப்பட்டுத் திருப்ப வேண்டிய தாயிற்று. அவள், தன் கண்களைத் துடைத்துவிட்டு, அவன் பக்கம் மீண்டும் திரும்பினாள்.

“ஒனக்கு பொம்பளைங்க மாதிரியே புடவை கட்ட ணும்.வளையல் போடணும்னு நெனப்பு வருமா?”

“இன்னும் வருது.இவ்வளவு அடிச்ச பிறகும் வருது:” “வரட்டுமே...என்ன குடி முழுகிப் போச்சு..இதே மாதிரி, ஆம்புளங்களைப் பார்த்தா ஆசை வருமா? அவங்களை வெறும் உடம்போட பார்க்கக் கூச்சமா இருக்குமா...”

“ஆமாக்கா.ஆமாக்கா! ஆனா டேவிட்டை நெனச்ச பிறகு, அவர்மேல மட்டும்தான் மனசு நிக்குது!”

“ஒனக்கு ஒரு டேவிட்டுன்னா, எனக்கு ஒரு முனிர் அகமது.இப்போ இவனுவ முக்கியமில்ல! இவனுவளுக்கு நாமும் முக்கியமில்ல.விட்டுத் தள்ளு. நீ வீட்டுக்குத் தெரியாம அடிக்கடி சேலை கட்டுவியா.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/201&oldid=1249855" இலிருந்து மீள்விக்கப்பட்டது