பக்கம்:வாடா மல்லி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 181


ஒன்ன மாதிரி-என்ன மாதிரி இருக்கிற அத்தனபேருக்கும் கிடைக்கிற மாதிரி எனக்கும் சூடு கிடைச்சுதுடி! நம்மள மாதிரி யாரும் பெறக்கப்படாது.டி.பெறந்தாலும் இருக்கப் படாது.டி.”

“எக்கா.என்னல்லாமோ பேசுlங்க...”

“பேசவேண்டியததாண்டி பேசறேன் என் மகளே. நான், இனிமேல் ஒனக்கு அக்கா இல்ல-அம்மா...ஒன்னப் பெறாமல் பெத்த அம்மா...எத்தனையோ பேரு எங்கிட்ட தத்தெடுக்கச் சொல்லி வந்தாளுவ... நான்தான் யோசிச்சேன்...ஒரு மகள் இருந்தாலும்-அது உருப்படியா இருக்கணும்னு நிதானிச்சேன். என் புருஷன் கூத்தாண்டவர் சத்தியமாய் சொல்றேண்டி..”

“ஒன் புருஷன் கூத்தாண்டவர் எங்க இருக்கார்.”

“கல்லாய் இருக்கார். கட்டையாய் இருக்கார். கூவாகத்துல இருக்கார். பிள்ளையார்குப்பத்துலயும் இருக்கார். இதெல்லாம் ஒரு நிமிஷத்துல சொல்ல முடியாத சங்கதி என் மகளே. ஒரு தடவை நீ என்ன அம்மான்னு கூப்பிடுடி. அப்பதான் நீ என்ன ஒப்புக் கொண்டதா அர்த்தம்டி..”

“மாட்டேன்கா...எனக்கு அம்மா பிடிக்காது.அவள் தானே என்ன இப்படி பெத்துப் போட்டுட்டாள்.”

“கூத்தாண்டவர், பெண் கேட்டா அவள் என்னடி செய்வாள்... எங்கம்மா, என்னப் பார்த்து துடிச்சது மாதிரிதான் அவளும் துடிச்சிருப்பாள். ஆனாலும், எப்படியோ என் கூட்டுல தூக்கிப் போட்ட குயிலு முட்டை நீ. ஒன்ன அடைகாத்து ஆயுள் வரைக்கும் பராமரிக்க வேண்டிது. என்னோட பொறுப்பு!”

“அப்படின்னா...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/203&oldid=1249872" இலிருந்து மீள்விக்கப்பட்டது