பக்கம்:வாடா மல்லி.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சு. சமுத்திரம்


“நான் ஒனக்கு அம்மான்னா அம்மாதான். நாம எங்க போனாலும் ஒண்ணாத்தான் போவோம்! ஒரே பாயில தான் படுப்போம். ஒரே தட்டுலதான் சாப்பிடுவோம்.நீ என்ன அம்மாவா பார்த்துக்கணும்.நான் ஒன்ன மகளா நடத்தணும்.கூத்தாண்டவரே, கூத்தாண்டவரே, ஒனக்கு பொண்ணு கிடைச்சது போதாதா. இன்னுமாய்யா ஒனக்கு ஆசை தீரல.இந்த சின்னப் பனங்குருத்த இப்படி கோர ஒலையா ஆக்கிட்டியே, ஆக்கிட்டியே...”

“எனக்கு எதுவுமே புரியமாட்டேக்கு அக்கா...”

“இன்னுமாடி நான் ஒனக்கு அக்கா...கடைசியா கேக்கேன் என் மவளே.என்னை இந்தக் கணத்திலேருந்து அம்மான்னு கூப்பிடணும். ஆனாலும், நான் ஒன்ன வற்புறுத்த மாட்டேன். பச்ச பனந்தோப்புல இடி விழுந்த மரமா நிற்கிற இந்தப் பாவிய அம்மான்னு சொல்லுறதும் சொல்லாததும் ஒன்னோட இஷ்டம்.”

அந்தப் பெண், இப்போது பேச்சடங்கி உட்கார்ந்தாள். பிறகு மடியில் கிடந்த சுயம்புவின் தலையைத் தலையணையில் வைத்துவிட்டு எழுந்தாள். கரங்கள் இரண்டையும் முன்பக்கமாகவும், பின்பக்கமாக வும் கட்டிக் கொண்டு நடந்தாள். அவ்வப்போது சுயம்புவின் வாயை-வாயை மட்டுமே பார்த்தாள்.

சுயம்பு தலையைப் பிடித்துக்கொண்டே யோசித்தான். அவள் துடித்த துடிப்பை அழுத அழுகையைத் தாயினும், சாலப் பரிந்த நேர்த்தியை நினைத்துப் பார்த்தான். இவள் வெறும் தாயாக மட்டும் தெரியவில்லை. ஆதிபராசக்தி.லோகமாதா.பெறாமல் பெற்றவள்.

சுயம்புவின் கண்களில் தாரை தாரையாக நீர், எலும்பு கசிந்து கண்வழியாய் திரவமாவது போன்ற தெளி நீர். உதடுகள் துடித்தன. நாடி நரம்புகள் ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/204&oldid=1249873" இலிருந்து மீள்விக்கப்பட்டது