பக்கம்:வாடா மல்லி.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சு. சமுத்திரம்


சாத்திக்கோ. கட்ட வேண்டிய புடவய கட்டிக்கோ. அம்மா ஒரு நொடியில, வந்துடறேன்.”

அவளோ அல்லது அவனோ அல்லது அதுவோ வெளியேறியதும் சுயம்பு ரத்தச் சேறான பேண்ட், சட்டை களைக் கழற்றி, அவற்றை ஒரே சுருட்டாய் சுருட்டி, ஒரு மூலையில் எறிந்தான். பிறகு எறிந்ததை எடுத்து தலைக்கு மேல் மூன்று தடவை சுற்றி அவற்றின்மீது காரி துப்பினான். துப்பி துப்பி அவற்றை வீசி கடாசிவிட்டு

அந்த டிரங்க் பெட்டியைத் திறந்தான். அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட சேலைகளை எடுத்துக் கீழே போட்டான். ஒரு வெளிர் மஞ்சள் புடவை கிடைத்தது. கூடவே அதே நிற ஜாக்கெட். பெண்ணாகி விட்டான்.

இதற்குள் அவள் மீண்டும் உள்ளே வந்தாள். சுயம்புவை அதிசயித்து பார்த்துவிட்டு அப்படியே கட்டி அணைத்தாள். கை வளையல்களில் சிலவற்றைக் கழற்றி, அவன் கைகளில் மாட்டினாள். அவன் நெற்றியில் முத்தமிட்டாள். உடனே அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். பிறகு தட்டுமுட்டு சாமான்களை எடுக்கக் கீழே குனிந்தான். அவள் பரவசப்பட்டு, “மகளே! மகளே!” என்று அவளைச் சுற்றிச் சுற்றி அரற்றினாள்.

தாய்க்காரி டிரங்க் பெட்டியைத் தூக்கிப் போனாள். பிறகு அந்தத் தகுதி மகளுக்குத்தான் உண்டு என்பதுபோல், அதைச் சுயம்புவிடம் நீட்டினாள். பிறகு தன் கொண்டை மாதிரி உள்ள சாக்கு மூட்டையின் முனையைப் பிடித்துத் துக்கிக்கொண்டாள். இருவரும் ஒசைப்படாமல் படியிறங்கினார்கள். ஒரு சைக்கிள் ரிக்ஷாவைப் பிடித்து பஸ் நிலையம் வந்தார்கள். திருவள்ளுவர் பேருந்து போர்டும், அதன் படமும் தொங்கிய இடத்தருகே வந்தார்கள். பெண்கள் கூட்டத்தில் சந்தேகம் வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/208&oldid=1249892" இலிருந்து மீள்விக்கப்பட்டது