பக்கம்:வாடா மல்லி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix

சமயம் சேலை கட்டுவேன். ரெண்டுமே பிடிக்கும்’ என்கிறான். விளைவு? அவனுடைய சகோதரி, தன் திருமணம் நின்றுபோனதே என்று கவலைப்படாமல், சுயம்பு இப்படி மாறிவிட்டதற்காக வருந்தித் தற்கொலை செய்துகொள்வது ஓர் அசலான பார்வை.

சுயம்புவிடம் காணப்பட்ட இந்தப் போக்கு, சுயம்புவின் அண்ணி கோமளம் தன் கணவன் ஆறுமுக பாண்டியிடம், உளவியலான அச்சத்தை ஏற்படுத்த, கணவனும் சுயம்பு போலவே இருந்துவிடுவானோ என எண்ணி, பெண்டாட்டியிடம் புருஷனாக இருக்கோ மான்னு பாருங்கோ என்று சொல்லவைப்பது இயற்கை யானது.

வீட்டைப் பிரிந்த சுயம்பு, சென்னை சென்று அலிக் கூட்டத்தாரோடு கலந்து விடுகிறான். அவர்கள் பார்வையில், சுயம்பு, பானையா மாறுமுன்னே எடுத்து வந்துவிட்ட பச்சை மண்! கதை டெல்லிவரை நீள்கிறது. அலிகளோடு அலிகளாய் டெல்லியில் அவனும் ஒருவன்..! அங்கு, அலிகளின் தர்பாரை நடத்திக் கொண்டிருந்த அல்லிராணி கங்காதேவியின் கரையில்லாச் சொத்துக்கு வாரிசாகிறான் சுயம்பு, சுயம்பு மேகலை’ என்று பெயர் சூட்டப் பெறுகிறான். இதுநாள் வரை கண்ணிர் சிந்திய அவலச் சுரப்பி, அலிகளின் அவலம் தீர்க்கும் அமுதசுரபி யாகியது!

அலிகளின் வாழ்க்கையை இவ்வளவு துல்லியமாகக் காட்டிவிட முடியுமா? அவர்களின் பண்பாட்டையும், சமுதாயத்தில் சரியாகக் காலூன்றாத அவர்களின் அவல நிலையையும் இவ்வாறு எழுத முடியுமா? முயன்றிருக் கிறார் சமுத்திரம்; வெற்றியும் பெற்றிருக்கிறார். அலிகள் வசிக்கும் இடங்கள், சூழ்நிலைகள், விழாச் சடங்குகள் ஆகியவை நன்கு உணர்த்தப்பட்டுள்ளன. அலிகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/21&oldid=1248949" இலிருந்து மீள்விக்கப்பட்டது