பக்கம்:வாடா மல்லி.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 சு. சமுத்திரம்


“எங்க அக்கா எப்படி இருக்காள் மலரு. ஒருவேள மாப்பிள்ளை மனம் திருந்தி வந்திருப்பாரோன்னு ஒரு

7 y

ஆசை..

“எல்லாருடைய ஆசையையும் தான் பொடிப் பொடியா ஆக்கிட்டீங்களே..சரி சரி என் லெட்டரைக் கொடுங்க... என் புத்திய எதையோ கழட்டி அடிக்கணும்.”

“லவ் லெட்டரைத்தானே. நான் அங்கேயே கிழிச்சுப் போட்டுட்டேனே... சத்தியமா நம்பு மலரு. எனக்கு அதனால என்ன பிரயோசனம்.”

சுயம்பு, இன்னொரு உருவத்தை அடையாளம் கண்டு கேட்டான்.

“அது என் தங்கச்சி மோகனா இல்ல? அவள் பக்கத்தில. அவன் யாரு...”

“லவ்வரு. ரெண்டு வருஷ லவ்வரு. உங்கள மாதிரி எலெக்ட்ரானிக் ஸ்டூடண்ட்... படிப்பை இடையில விடாதவன். பிடிச்சாலும் பிடிச்சாள் புளியங்கொம்பாய் பிடிச்சா...” *

“என் தங்கச்சிய கண்கலங்காம காப்பாத்துவானா?”

44 - • * jo அதை நீங்க சொல்லப்படாது.

சுயம்பு தானே வேண்டுமென்றே புடவையைக் கட்டிக் கொண்டு படிப்பையும் விட்டுவிட்டது போன்று அவள் பேசினாள். அவனை அருவருப்பாய் பார்த்தபடியே மோகனா நின்ற பக்கம் போனாள். அந்த வாலிபனிடம் இவனைக் காட்டிப் பேசினாள். உடனே அந்த வாலிபன் ஸ்தம்பித்தான். மோகனாவிடம் எதை எதையோ கேட்டான். அவள், தட்டுத் தடுமாறிப் பேசிக்கொண்டே போனாள். அவன் அதட்டுவது போல் தலையை ஆட்டி னான். உடனே அவள் அழத் துவங்கினாள். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/210&oldid=1249894" இலிருந்து மீள்விக்கப்பட்டது