பக்கம்:வாடா மல்லி.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

surt_n unbsl 4 189

கழுத்தும் வாயும் வெட்டு வந்ததுபோல் மேலும் கீழும் ஆடியது.

சேலை கட்டிய சுயம்புவால் தாங்க முடியவில்லை. நேராக அவர்கள் பக்கம் போனான். வாலிப மிடுக்கோடு அதற்குரிய உடையோடு பயில்வான்போல் நின்ற அந்த வருங்கால மச்சானிடம் கெஞ்சினான்.

“நான் இப்படி ஆயிட்டனேன்னு என் தங்கைய கை விடாதீங்க... ஏதோ என் போதாத காலம். என்னால ஒங்களுக்கு சிரமம் இருக்காது. நான் திரும்பி வரவே மாட்டேன் மாப்பிள்ள...”

“ஒங்க ஊருப் பக்கம் இப்படி ஏதோ நடந்தது தெரியும். ஆனால், அது ஒங்க வீட்ல என்கிறது எனக்குத் தெரியாது. இவள் எதுக்காக என்கிட்ட மறைக்கணும்? இதை மறைத்தவள் நாளைக்கு எதை எதையோ மறைப்பாள் இல்லியா, மலரு?”

சுயம்பு கையைப் பிசைந்தான். கையெடுத்துக் கும்பிடப் போனான். அப்போது கூட்டம் கூடுவது போலிருந்தது. திருவள்ளுவர் பஸ்ஸும் வந்துவிட்டது. தாய்க்காரி குரல் கொடுத்தாள். “மகளே. மகளே. வா மகளே...”

பல்லைக் கடித்துக்கொண்டிருந்த மோகனா கத்தினாள்.

“போய்த் தொலையேண்டா. அக்காவையும் ஒரு வழி பண்ணிட்டே... என்னையும் ஒரு வழி பண்ணிட்டே ! இதுக்குமேல யார வழி பண்றதுக்காக நிக்கே. ஒன்ன இப்படி பட்டப்பகல்ல சேலை கட்டிக்கிட்டு யாரு நிக்கச் சொன்னது: அந்தத் துணி ஒனக்கு சேலை. அதுவே எனக்கு

i y; பாடை : துரி.

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/211&oldid=630289" இலிருந்து மீள்விக்கப்பட்டது