பக்கம்:வாடா மல்லி.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 197


ஒரு அரைமணி நேரத்துலயே கழுத்தப் பிடிச்சுத் தள்ளினான். ‘அம்மாவை மட்டுமாவது நல்லா வச்சுக்கடான்னு தள்ளாத அம்மாவைக் கட்டிப்பிடிச்சுக் கதறிட்டு ஒரு ஆஸ்பத்திரில ரூம் எடுத்து தங்கினேன். பணம் வாங்க எடுத்துட்டுப்போன பணமெல்லாம், நாசமாப் போயிட்டு. இவள் எனக்கு மகளா கிடைச்சது எல்லாத்தையும் சரிக்கட்டிட்டு. இந்த சந்தோஷமே போதும்.”

“இவளப்பத்தி. நா ஒங்கிட்ட அப்புறம் விவரமா பேசணும். சாயங்காலமா பேசிக்கலாம்.”

குருவக்கா எழுந்தாள். எழுந்தபடியே ஆறுதலாகவும், அன்பாகவும் பேசினாள்.

“ஒம்பேரு என்னடி..”

“சுயம்பு.”

“நல்ல பேரு. நல்லவளாவே இரு. ஏண்டி தடி முண்டங்களா. இவளுக்கு எவளாவது நாஷ்டா வாங்கிக் கொடுங்களேண்டி... அவளையே நாஷ்டா மாதிரி பாக்கீங்க..”

குருவக்காவிற்கு, மற்றவள்கள் மரியாதை காட்டி எழுந்திருக்கவில்லை தான். ஆனாலும், அவர்கள் கால்களை குறுக்கிக்கொண்டு, அவளுக்கு வழிவிட்டதில், ஒரு தோழமை உறவும், அந்தத் தோழமைக்குத் தொண்டாற்ற அவர்கள் தயாராய் இருப்பது போலவும் தோன்றின. இதற்குள், ஒருத்தி, நாஷ்டா கொண்டு வந்தாள். குருவக்கா, அவசரப்பட்டு திட்டிவிட்டமே என்பது மாதிரி உதட்டைக் கடித்து நின்றுவிட்டு, போய்விட்டாள். இதற்குள், பச்சையம்மா நாஷ்டா வாங்கி வந்தவளுக்குக் காசை நீட்ட, அவள் மறுக்க ஒரு செல்லச் சண்டையே நடந்தது. “போங்கடி. என் மகள் கொஞ்சம் தூங்கட்டும்’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/219&oldid=1249903" இலிருந்து மீள்விக்கப்பட்டது