பக்கம்:வாடா மல்லி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XX


பற்றிய சமுதாயப் பொறுப்புணர்ச்சியும், மனிதநேயமும் மிகுந்த அக்கறையோடு இந்நாவலில் கூறப்பட்டுள்ளன. டேவிட், பச்சையம்மா ஆகியோர் அலிகள் பற்றி ஆங்காங்கே கூறியிருப்பது இரக்கத்தை வரவழைப்பதாகும். அதேபோல், டி.வி.யில் சுயம்பு, அலிகள் சார்பில் பேசுவதும் சமூகத்தில் அப்பிரிவினர் மதிக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

தோழர் சு. சமுத்திரத்தின் புதினம் இப்படித்தான் இருக்கும் என்று முத்திரை குத்திவிடலாம். கிராமியப் பின்னணியைப் பகட்டாகப் புனையாமல், பட்டவர்த்தன மாகக் கூறுவது இவருக்குக் கைவந்த கலை. அசலுக்கு அணிகலன் பூட்டிப் பார்க்காதது இவரது நடை. இவர் தமிழ்ப் புதின உலகில் தனியாக மணக்கும் காட்டுச் செடி. அதன் வாசம், இவருக்குத் தொலைதுாரப் பார்வையையும் தந்துள்ளதை இப்புதினத்தால் அறியலாம்.

இவற்றின் அடிப்படையில், தமிழில் ஒரு புதிய கருப் பொருளைச் சமூகச் சிந்தனையோடு அணுகிய இவருக்கு, ‘தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி சொல்ல வேண்டும்.

28, பங்காரு குடியிருப்பு, இராம. குருநாதன். கே.கே. நகர், சென்னை-78.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/22&oldid=1248663" இலிருந்து மீள்விக்கப்பட்டது