பக்கம்:வாடா மல்லி.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 சு. சமுத்திரம்


அத்தனை பேரையும் விரட்டி விட்டாள். கதவைச் சாத்திவிட்டாள்.

சுயம்பு, அழப்போனான். அந்த வாய்க்குள் பச்சையம்மா இட்டிலித் துண்டை எடுத்து வைத்தாள். மசால்வடைத் துண்டை சட்டினியில் புரட்டி ஊட்டினாள். அவன் வீட்டுக் கோழிக.ட கொத்த விரும்பாத வாடை. வெளியே துப்பப்போனவன், அம்மாவின் கண்களில் பொங்கிய பாசத்தைப் பார்த்துவிட்டு, துடித்த துடிப்பைக் கண்டுவிட்டு, அப்படியே விழுங்கினான். வாந்தி வரப்போனது. வீட்டை நினைத்து அழப்போனான். அந்த அழுகையையே துக்கத் துண்டுகளாக மாற்றி, உணவுத் துண்டுகளோடு கலந்து உண்டான்.

பச்சையம்மா, வீட்டைப் பெருக்கினாள். விரித்த பாயை எடுத்து உதறியபடியே மீண்டும் அதை விரித்தாள். அழுக்குத் தலையணைக்குப் பழைய புடவையை மடித்து உறையாகப் போட்டாள். சுயம்புவை அப்படியே கிடத்தினாள், தொலைவில் கிடந்த ஒரு துக்குப் பை பொட்டலத்தைக் கால் விரல்களைக் கொக்கியாக்கி லேசா வளைத்துப் பிடித்து மகளின் கால்களை மயிலிறகுபோல் துக்கிப் பிடித்து அதில் வைத்தாள். பிறகு எழுந்து, உடம்பில் மூச்சோட்டம் இன்றி எந்த ஒட்டமும் இல்லாமல் கிடந்த மகளை ஆசை தீரப் பார்த்துவிட்டு, கதவைத் திறந்து வெளியே சாத்தினாள்.

21

சுயம்பு பிணம் போலக் கிடந்தான். துக்கத்திற்கு இதற்குமேல் எல்லை இல்லை என்பது போலவும், அது எல்லை தாண்டி தூக்கத்திற்கு வந்துவிட்டது என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/220&oldid=1249904" இலிருந்து மீள்விக்கப்பட்டது