பக்கம்:வாடா மல்லி.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 சு. சமுத்திரம்


பத்தாவது வகுப்புக்காரி பாத்திமா அவன் ஜாக்கெட்டைப் பிடித்திழுத்து, முதுகுப் பக்கத்தைத் திருப்பி முகத்துககு எதிராகப் பேசினாள்.

“எந்தப் பிரச்னையையும் அதன் எல்லைவரைக்கும் போய்ப் பார்க்கணும் சுயம்பு. நீ வீட்டுக்குப் போனால், அங்கே போய் என்ன பண்ணப்போற. கற்பனை செய்து பாரு. புடவையைக் கட்டாமல் இருக்க முடியுமா? அப்பா சூடு போடாமல் இருப்பாரா? ஊரு சிரிக்காமல் இருக்குமா? நீ போறதால ஒன் வீட்டுக்கு பிரச்னை வருமே தவிர, எந்தப் பிரச்னையும் தீராது! நல்லா யோசிச்சுப் பாரு. காரு வச்சிருக்கிற குடும்பத்துல பிறந்திட்டு, இங்கே கால இழுத்துக்கிட்டு திரியுற எனக்கு மட்டும் எங்க வீட்டுக்குப் போக ஆசையில்லையா...”

சுயம்பு, யோசிக்க யோசிக்க யோசனையே அற்றுப் போனான். பச்சையம்மா, அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கேவினாள்.

“கரையான் புத்துல இருந்து வெளிப்பட்ட ஈசலு பழையபடி அந்தப் புத்துக்குள்ள போக முடியாது மகளே! உடைஞ்ச கல்லு ஒட்டாது மகளே! கீழே விழுந்த குஞ்சு காக்கா நினைச்சாலும் அதை கூட்டுக்குள்ள வைக்க முடியாதுடி மகளே! நாம பிறத்தியார் சிரிக்கதுக்காக - சினிமாவில காமெடிக்காக - முரட்டுப் பயலுக்கு வடிகாலாகப் பொறந்த பொட்டைங்கடி..”

சுயம்பு மெள்ள மெள்ளக் கேட்டான். “ஒரு லெட்டராவது, ஒரே ஒரு தடவை.” “லட்டர் வேண்டாம் மகளே! அது அவுங்கள கெஞ்சுறது மாதிரி இருக்கும். நான் எங்க வீட்டுக்கு செய்ததை ஒனக்கும் செய்யப்போறேன். உங்க அக்கா, பேருக்கோ அப்பா பேருக்கோ இருபத்தஞ்சு ரூபாய் அனுப்பி வைக்கேன். நம்ம அட்ரஸையும் கொடுக்கேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/224&oldid=1249909" இலிருந்து மீள்விக்கப்பட்டது