பக்கம்:வாடா மல்லி.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 203


நீயும் கீழ நாலு வரி எழுது, அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். என்ன. குருவக்காவா? இதோ வந்துட்டேன்.” பச்சையம்மா குடிசைக்கு வெளியே வந்தாள். குருவக்கா அவளை ஒருபக்கமாய் கூட்டிப் போனாள். அவள் சொன்னதைக் கேட்டு பச்சையம்மா பதறினாள்.

“முடியாதுக்கா. முடியவே முடியாது. என் மகள யாருக்கும் கொடுக்க முடியாது. ஊசி முனையில ஒத்தக் காலுல தவம் இருந்து எடுத்தது மாதிரியான மகள். நெருப்ப வளர்த்து அதுல திரெளபதியா வந்ததுமாதிரியான மகள். இதுல பேசுறதுக்கு எதுவுமே இல்ல.”

[22]

கTவல் துறையினர் சொல்வார்களே, நிலைமை

‘கட்டுக்குள் இருப்பதாக, அப்படிப்பட்ட நிலைமை சுயம்புவின் சொந்தக் குடும்பத்தின் நிலைமை.

சுயம்பு காணாமல் போயும், மரகதத்தின் கல்யாணம் ரத்தாகியும் ஐந்தாறு நாட்களாகிவிட்டன. ஆறுமுகப் பாண்டி, தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு வயலுக்குப் போகத் துவங்கிவிட்டான். எங்கேயோ கண் காணாத சீமைக்குப் போன பிள்ளையாரும் ஊர் திரும்பி விட்டார். அவரது மருமகள் கோமளமும், மகனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பத் துவங்கிவிட்டாள். அக்காளின் கல்யாணம் நின்ற மறுநாள் காலையிலேயே, டவுனில் காதலனைக் காணவந்த மோகனா, அண்ணனைப் பார்த்ததை மூச்சு விடவில்லை. அவள் குட்டும் வெளிப்பட்டுவிடும் என்ற பயம். தாய்க்காரி வெள்ளையம்மாசுட, சரியாய்ச் சாப்பிடத் துவங்கி விட்டாள். ஆனால் ‘அன்னம் தண்ணி அதிகமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/225&oldid=1249910" இலிருந்து மீள்விக்கப்பட்டது