பக்கம்:வாடா மல்லி.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 207


“அழாதம்மா. நீ காரணமா இல்லாட்டாலும், வேற யாராவது காரணமா ஆயிருப்பாங்க... அப்படியே இல்லாட்டாலும், அவனால அங்க நீடிச்சிருக்க முடியாது. நீ வந்ததுல ஒரு சந்தோஷம். நீ அழுகிறதுலகூட ஒரு ஆனந்தம். ஏன்னா, நீங்க வாரது வரைக்கும் நாங்க அனாதை மாதிரியே தவிச்சோம். எம்மா. கோமளம் சட்டுப்புட்டுன்னு சோறு பொங்கும்மா...”

டேவிட், கோமளத்தைப் பார்த்துக் கையாட்டிவிட்டு, பிள்ளையாரை நோக்கிப் பேசினான்.

“வேண்டாங்கையா. காபி கொடுங்க போதும். வழில கொஞ்சம் வேலை இருக்கு. கலியானத்துக்கு வந்த மூர்த்தி என்கிட்ட நடந்ததைச் சொன்னாரு. சொந்த அக்கா கலியாணமே நின்னது மாதிரி அழுதாரு. ஓங்க மகன் சுயம்பு எனக்கு சில லெட்டர்களை எழுதியிருந்தாரு. அவரு நடையுடை பாவனை. எல்லாவற்றையும் கணக்குல வச்சுப் பார்த்தப்போ. ஒங்க மகனால் சேல கட்டாம இருக்க முடியாது என்கிறதும், அவருக்கு எந்தப் பொண்ணோடயும் கலியாணம் காட்சி இருக்க முடியாது என்பதும், புரிஞ்சுது. அவர் தானாச் செய்யலை ! உடம்போட உள்ஸ்ரீப்புக்கள் அப்படிச் செய்ய வைக்குதுங்க.”

ஆறுமுகப்பாண்டி, துண்டால் கையைத் துடைத்த படியே, அங்கே வந்தான். இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தபடியே அப்போ இவனக் குணப்படுத்தவே முடியாதா தம்பி. இது பரம்பரைக் குணமோ...” என்று கேட்டான். அவனுக்கும், ஒரு வேகம். தம்பிக்கு வந்தது தனக்கும் வந்துவிட்டதாக அவள் கூசாமல் சொன்னது, ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம். ஆமாம் என்று சொல்லி விடக்கூடாதே என்று ஒரு நடுக்கம். ஆகையால் அவன் மேற்கொண்டு பேசாமல் இருந்தபோது, டேவிட் சுற்றும் முற்றும் பார்த்தபடியே கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/229&oldid=1249917" இலிருந்து மீள்விக்கப்பட்டது