பக்கம்:வாடா மல்லி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

சுயம்பு அந்த சூட்கேலைப் பிடித்துக் கொண்டிருந்த விதம், அதுவே அவனைக் கெளவிக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது.

ஒரு கையால் பிடிக்க வேண்டிய சூட்கேஸை முதுகில் சார்த்தி வைத்துக்கொண்டு பின்புறமாய் இரண்டு கைகளையும் தோள் வழியாய்க் கீழே கொண்டுபோய், அதன் சின்னப் பிடியில் பெரிய பிடி’ போட்டு, எதுவும் பிடிபடாதவன் போல், அந்தத் தார்ச்சாலையில் குறுக்கும் நெடுக்குமாய் அலைமோதினான். சிறிது நேரத்தில் பெட்டியைப் பிடித்த இரு கரங்களையும் விடுவித்து, தலையில் வைத்தபோது அந்தப் பெட்டி கீழே விழுந்து சத்தம் போட்டது. அது புரியாமலே, அவன் அங்குமிங்கு மாய்ச் சுற்றினான். பிறகு மீண்டும், இரு கரங்களையும் பின்புறமாய்க் கொண்டுபோய், விரல்களை மடக்கிக் கொண்டான். பெட்டியை மீண்டும் பிடித்திருப்பதாக அவனுக்கு ஒரு அனுமானம்.

மேற்கும், கிழக்குமாய், போய்க்கொண்டிருந்த அந்த தார்ச்சாலையைப் போலவே, அதேகனத்தில் அந்தகார மான இருள். அந்தப் பகுதி முழுவதையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்த அசுரத்தனமான இருள். பேய் இரைச்சலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/23&oldid=630310" இலிருந்து மீள்விக்கப்பட்டது