பக்கம்:வாடா மல்லி.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 சு. சமுத்திரம்


உயிர்ப்புகளில் ஒன்று, பெண் தன்மை உள்ளதாகவும் இன்னொன்று ஆண் தன்மை உள்ளதாகவும் இருக்கும். பெண்ணின் கருப்பை முட்டையோ பெண் தன்மை உள்ளது. இதில் ஆணின் ஆண் தன்மை உள்ள உயிர்த்திரள் சேர்ந்தால், குழந்தை ஆணாகிறது. பெண் தன்மை சேர்ந்தால் பெண்ணாகிறது. இதை எக்ஸ்எக்ஸ் எக்ஸ் ஒய். என்று சொல்வார்கள். தேனிக்களில் ராணி ஈ, கருத்தரிப்பதற்காக, வேலைக்கார ஈக்கள், ஒரு காரியம் செய்கின்றன. பருவதாகத்தால், பறந்து போகும் பெண் ஈ, பின்னாலேயே, ஆண் தேனிக்களைத் துரத்துகின்றன. இனச்சேர்க்கை ஏற்பட்டதும் கூட்டுக்குத் திரும்பும் ராணி ஈ, முட்டைகள் இடும். இவற்றில் வெளிப்படும் ஆண் ஈக்களை அப்படியே விட்டுவிடும். ஆனால் பெண் ஈக்கள் பிறந்தால், அவற்றில் ஒன்றையோ இரண்டையோ போஷாக்குடன் வளர்த்து, மற்ற பெண் ஈக்களை, போஷாக்கு இல்லாமல் காயடிக்கும். போட்டிக்கு அவை வந்துவிடக்கூடாதே என்கிற பயம். இப்படி போஷாக்கு குறைந்த அலி ஈக்கள்தான், வேலைக்கார ஈக்கள். இதனால் மனித சமுதாயத்திலும் ஏதோ ஒரு சமச்சீர் நிலையை பராமரிப்பதற்கு அலிகள் உருவாகிறார்கள். இவர்களுக்கு நம்மைப்போல்தான் நாற்பத்தாறு குரோமோசங்கள் என்றாலும், இவர்களுக்கு எப்படி இந்த அலித்தன்மை வருகிறது என்பது இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆனால், தேனி இனம் வாழக் காரணமான வேலைக்கார ஈக்கள் போல், இவர்களும் மானுடம் வாழ பிறப்பிக்கப்படுகிறார்கள். ஆனாலும், அலித்தன்மைக்கு குரோமோசங்களில் ஏற்படும் திரிபுகளோ ஹார்மோன் சுரப்பிகளின் கோளாறோ. துல்லியமாய் தெரியவில்லை.

“மானுடத்தின் இந்த முன்றாவது பிரதியான அலியை கிண்டல் செய்வதும் கேலி செய்வதும் காட்டுமிராண்டித் தனம். நமக்கு சாப்பிடுவது எப்படி இயற்கையோ அப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/232&oldid=1249920" இலிருந்து மீள்விக்கப்பட்டது