பக்கம்:வாடா மல்லி.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 211


அவர்களுக்கு பெண்ணாகவோ, அல்லது ஆணாகவோ பெண் உடம்பில் ஆணும், ஆண் உடம்பில் பெண்ணும் இருப்பது இயற்கை. இதனால் இவர்கள் வீரத்திலோ விவேகத்திலோ குறைந்தவர்கள் அல்ல. தில்லியிலிருந்து மதுரை வரைக்கும் வந்து நம் முன்னோர்களுடைய முதுகுத் தோலை உரித்த மாலிக்காபூர் ஒரு அலி. இன்னும் பலர் மனதுக்குள் சேலை கட்டி, உடம்புக்கு ஆணுடை தரித்து ஆபீஸர்களாய் கூட இருக்காங்க, ஒங்க மகனுக்கும், சொல்ல வேண்டிய விதமாச் சொல்லியிருந்தால் அவரும் ஒரு என்ஜினியரா மாறியிருக்கலாம். டாக்டருக்கு படிக்கிற எனக்கே இது ஞாபகத்துக்கு வரல. ஒங்களைச் சொல்லிக் குத்தமில்லே. ஆனால் அவரு சேலை கட்டறது, பெண் மாதிரி நடந்துக்கறது வேணுமுன்னு செய்யற காரியம் இல்ல. மருத்துவத்துறையில், அலிப்பிறப்பை, ஹெர்மா - புராடக் என்று சொல்கிறோம்.”

பிள்ளையார் பெமூச்சு விட்டார். முத்துவுக்கு முழுசும் புரிந்தது. ஆறுமுகப்பாண்டிக்கு அரைகுறையாகத் தெரிந்தது. பிள்ளையார் பெருமூச்சை முடித்துக் கொண்டே கேட்டார்.

“அப்போ என் மகன் சுயம்புவைத் திருத்தவே முடியாதா...”

“திருந்த வேண்டியது நாமதான்.”

ஆறுமுகப்பாண்டி மனதிற்குள் மனைவி அழுத்திய சுமையை, கண்களை அவை கலக்கும்படி, வைத்துக் கொண்டு, ஒரு சந்தேகம் கேட்டான்.

“டாக்டர் தம்பி, இது பரம்பரை நோயா. தம்பிக்கு வந்தது அண்ணனுக்கும் வருமோ?”

“கிடையவே கிடையாது. அலிகளுக்குக் குழந்தை பெறுகிற தன்மையே கிடையாது. இது முளைக்கும் போதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/233&oldid=1249921" இலிருந்து மீள்விக்கப்பட்டது