பக்கம்:வாடா மல்லி.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 சு. சமுத்திரம்


சாவியாப் போகிற விதை நெல்லு மாதிரி. குஞ்சு இல்லாத கூமுட்டை மாதிரி.”

ஆறுமுகப்பாண்டி சிறிது நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது, முத்து கேட்டான்.

“அப்போ ஆம்பளை, பொம்புளையா மாறுறது, பழனியம்மா, பழனியப்பனா மாறுனது, எப்படி?”

“அலித்தன்மை வேறு. பாலின மாற்றம் வேறு. அலி அலிதான். குழந்தை பெறவும் முடியாது. தரவும் முடியாது. திடீரென்று பெண்ணாய் மாறுகிறவர்களை அலின்னு தப்பா நெனைக்கோம். பொதுவா மானிடத்தை ஆண் பெண் என்று பார்ப்பதே தப்பு: ஆண் தன்மை அதிகம் உள்ளவங்க, பெண் தன்மை அதிகம் உள்ளவங்க என்றே பார்க்கணும். ஒவ்வொரு ஆண்கிட்டயும் பெண் தன்மை உண்டு. ஒவ்வொரு பெண்கிட்டயும் ஆண் தன்மை உண்டு. முழு ஆண், முழுப் பெண்ணுன்னு கோடு கிழிக்க முடியாது. ஏன்னா பெண்ணின் முட்டையும் ஆணின் உயிர்த்திரளும் சேர்ந்ததே மானுடம். ஆண்தன்மை ஒரு கட்டத்துல அதிகரிக்கும்போது அதுக்கு உட்படுற பெண் ஆணாகவும், பெண்தன்மை முற்றும்போது, ஆண் பெண்ணாகவும் மாறலாம். ஆனால், அலியாக முடியாது. அலித்தன்மை, மானுடத்தின் மூன்றாவது குலம்...”

எல்லோரும் பிரமித்து நின்றபோது, வைக்கோல் படப்பு பக்கத்தில் ஒரு சத்தம் கேட்டது. அங்கே நின்றபடியே கோமளம் அறிவித்தாள்.

“சாப்பாடு ரெடி..” “அய்யய்யோ.. வேண்டாமுன்னு சொன்னேனே.” “நீங்க சொன்னா நான் கேட்கணுமா. எழுந்திரிங்க” எல்லோரும் எழுந்தபோது, அவர்களோடு சேர்ந்து எழுந்த ஆறுமுகப்பாண்டியின் மனதுக்குள் ஒரு விபரீத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/234&oldid=1249922" இலிருந்து மீள்விக்கப்பட்டது