பக்கம்:வாடா மல்லி.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 சு. சமுத்திரம்


மரகதத்தின் ஒப்பாரி. அவளின் குரல் அடங்கியதும் முத்து கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தான். பிள்ளையார் மகனுக்கு ஆணையிட்டார்.

“ஏடா பெரியவன். இன்னிக்கு பஸ்ல நெரிசலா இருக்கும். சேர்மன் கோவில் விசேஷம் பாரு. பஸ்ல இடம் பிடிச்சு ஏத்திட்டு வா. நான், வயலுக்குப் போறேன். நான் உங்களை மறக்கவே மாட்டேன். பிரமிளா. ஒன்னோட பெருந்தன்மை. பெரு.”

பிள்ளையாரால் பேச முடியவில்லை. ஒடிவிட்டார். அவர்களை வழியனுப்ப டவுன்வரைக்கும் போக வேண்டியிருந்ததால், ஆறுமுகப்பாண்டி வீட்டுக்குள் போனான். அவனுக்குச் சட்டையை நீட்டியபடியே கோமளம் கேட்டாள்.

“சுயம்புவோட நிலமைபற்றி ரகசியமா பேசினது மாதிரி இருந்ததே. டாக்டர் என்ன சொல்றார்?”

ஆறுமுகப்பாண்டி அவள் நீட்டிய சட்டையை வாங்காமல் வேறு சட்டையைப் போட்டுக்கொண்டு வெடித்தான்.

“அன்றைக்குக் கேட்டே பாரு... நானும், சுயம்புவுக்கு அக்காளா ஆகிட்டு வாறேன்னு. அது நிசந்தானாம். நானும் பொம்பளையா ஆகிக்கிட்டே இருக்கேனாம். ஒனக்கு எந்த சுகமும் தர முடியாதாம். ஒன்னைப் பொறுத்த அளவில் நான் பேடிதான்...!”

“அய்யோ.. கடவுளே. நீங்களும் ஏதாவது மருந்து சாப்பிடலாமேன்னு சொல்ல வந்தேன்... டேவிட்டு ஒங்களுக்கு மருந்து சாப்பிடணுமுன்னு சொன்னாரான்னு கேட்க வந்தேன்.”

“ஒனக்கு எல்லாருமே அவன் இவன். இந்த டாக்டர் பையன் மட்டும் எப்படி ‘அவரு’... அவன் மருந்து எனக்கு வேணுமா? இல்ல அவனே ஒனக்கு மருந்தா வேனுமா..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/236&oldid=1249924" இலிருந்து மீள்விக்கப்பட்டது