பக்கம்:வாடா மல்லி.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 215


கோமளம், வெடித்திருப்பாள். அது அசிங்கம் என்று அப்படியே தரையையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் வெளியேறினான். அவர்கள் “எக்கா வாறோம்” என்று விடைபெற்றதோ, அவளை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டுப் போவதோ, அவள் பார்வையில் படவில்லை. செவியில் விழவில்லை. அப்படியே குன்றிப்போய் நின்றாள். சுயம்புவை, சுக்கு நூறாக்க வேண்டுமென்ற ஆவேசம். அந்த ஆவேசத்திலேயே அங்குமிங்குமாய் பார்த்தபடி நடந்தாள். கால் வலித்தபோதுதான் கால நேரம் தெரிந்தது. வெளியே வேப்பமரத்தடியிலிருந்து திரும்பப் போனாள்.

“ஒங்களுக்கு மணியார்டர் வந்திருக்கு. சுயம்பு அனுப்பியிருக்கார்.” -

கோமளம், அந்த தபால்காரரையே சுயம்புபோல் எரித்துப் பார்த்தாள்.

23

அந்தச் சேரியின் சேரிக்குள், சராசரி நாளைவிடச் சுவையான நாள.

சென்னையிலுள்ள அத்தனைப் பேட்டைகளி லிருந்தும் ‘அலி அலியான கூட்டம். பெரும்பாலானவர்கள் பட்டுச் சேலை கட்டியிருந்தார்கள். ‘கில்ட்டோ,’ ‘கவரிங்கோ அல்லது தங்கமோ அத்தனை நகைகளும் கழுத்திலும் காதிலும் மின்னின. ஒரு பந்தல் கூடப் போடப்பட்டிருந்தது. அத்தனைபேரும், பேட்டை, பேட்டையாய் நின்று கொண்டிருந்தனர். பந்தலுக்கு அப்பால் மூன்று பெரிய கல் அடுப்பில் அண்டாச் சோறு கொதித்தது. அதேமாதிரியான சின்னக்கல் அடுப்பில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/237&oldid=1249927" இலிருந்து மீள்விக்கப்பட்டது