பக்கம்:வாடா மல்லி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2  சு. சமுத்திரம்


காற்று. அதற்கு ஏற்றாற்போல் பேய்த்தனமாய் ஆடும் சவுக்கு மரங்கள். தொலைவிலுள்ள ஒரு குட்டையில் ‘அய்யோ.. அய்யோ என்பது மாதிரியான தவளைக் கத்தல்கள். அந்தப் பகுதி முழுவதுமே, மேலே கறுப்புக் குகை போன்ற ஆகாய மூடியால் அடைபட்டிருப்பது போன்ற தோற்றம். பல்வேறு மரங்கள், இருட்கோடுகளாய், இருளின் அடர்த்தியை கூட்டிக் கொண்டிருந்தன. ஆனாலும் ஆங்காங்கே மின்மினிப் பூச்சிகள் சின்னச் சின்ன ஒளி முத்துக்களைச் சிதறிக்கொண்டிருந்தன. அவ்வப்போது மேகம் சினந்து காட்டிய உயரவாக்கிலான மின்னல் பல்வரிசையின் ஒளி பட்டு தரையில் கிடந்த சில ஜரிகைக் காகிதங்கள் ஒளி வடிவில் ஒளிர்ந்தன.

சுயம்பு, தலையை மேலும் கீழுமாய் பக்கவாட்டிலும் ஆட்டிக் கொண்டான். உடம்புக்குள் சிறைப்பட்ட ஏதோ ஒன்றை விடுவிக்கப் போவதுபோல், வாயகல, நின்ற இடத்திலேயே நின்றான். பின்னர் அந்த ஏதோ ஒன்றுக்குள் சிறைபட்ட மேனிக்காக விடுதலைப் போராட்டம் நடத்துக்வதுபோல் அங்குமிங்குமாய் தன்னை உதறிக் கொண்டான். அந்த உடம்பிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் தலையை தனிப்படுத்திக் காண்பித்தான். கைகளை ஒன்றுடன் ஒன்று மோத விட்டான். உதடுகளைக் கடித்துக்கொண்டான். பிறகு அப்படியே அங்குலம் அங்குலமாய்க் குனிந்து தலை எது, கால் எது என்று கண்டுபிடிக்க முடியாதபடி, குவியலாய்க் கீழே கிடந்தான்-அதுவும் அந்தச் சாலையின் நடுப்பகுதி யிலேயே. அப்படியாவது எந்த லாரியோ, அல்லது காரோ தன்மீது மோதி, தலையைச் சக்கரத்தோடு கொண்டு போகட்டும் என்பது மாதிரியான முடக்கம்.

தொலைதுாரத்தில் ஒளி தோன்றியது. மிகச்

சின்னதாய்த் தோன்றிய அந்த ஒளி, சிறிது நேரத்தில் மேலே நெற்றிக் கண்ணாகவும், கீழே சாதாரணக் கண்களாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/24&oldid=1248794" இலிருந்து மீள்விக்கப்பட்டது