பக்கம்:வாடா மல்லி.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 சு. சமுத்திரம்


அடைத்தவள்களில், அவளுடைய சேலாக்களை மட்டும் காலால் இடறிப் பெரியவங்களுக்கு வழி விடுங்கடா, விடுங்கடி’ என்று மாறி மாறி ‘டா'வும், ‘டி’யும் போட்டு போட்டு குரு அலியைக் கூட்டிப்போனாள். உடனே பத்தாவது வகுப்பு பாத்திமா உட்கார்ந்தபடியே இருவர் கால்களையும் கையால் தொட்டு, அதற்காக வளைத்த உடம்பை நிமிர்த்தினாள். குருவக்கா, அவள் தாய் மதனாவிடம் கத்தினாள். நல்லா இருக்குடிம்மா ஒன் பொண்ணு செய்யுற காரியம். எழுந்து கும்பிட்டால் என்னவாம்.’

இதற்குள், குரு அலி, முர்கேவாலி மாதா முன் உட்கார்ந்தார். எல்லோரும் கல்லடுப்பில் வைக்கப்பட்ட பச்சை வண்ணம் தீட்டப்பட்ட பால் செம்பையே பார்த்தார்கள். பால் பொங்கியபிறகே, பூஜை.

முன்னால், ஒரேயடியாப் போகாமலும், அதே சமயம் பின் தங்காமலும் மத்தியில் சுயம்புவோடு இருந்த பச்சையம்மா, அந்த நிகழ்ச்சிபற்றி விளக்கப்போனாள். பச்சைக் கரை போட்ட, வெளிர் மஞ்சள் சேலையில், வெள்ளை வளையல்களில், பச்சை மதலைபோல் அனைவரையும் ஊடுருவிப் பார்த்த சுயம்புவை, முட்டியில் செல்லமாய் தட்டியபடியே, மெதுவான குரலில், பச்சையம்மா விளக்கினாள். எவளாவது, ஒரு லோலாயி தன்னோட விளக்கம் சரியில்லை என்று தட்டிக் கேட்டுவிடக்கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வோடு இந்த மாதிரி சமாசாரங்களை இப்படித்தான் ரகசியமாய் பேச வேண்டும் என்பது போல் பேசினாள்.

“அதோ படத்துல இருக்கவள்தான் ஒன்னோட, என்னோட, நம்மோட லோகமாதா. இந்த மாதா மூலம் தான் மகளே நாம் உற்பத்தியானோம். அந்தக் கதைய சொல்றேன் கேள். அதோ.. மாதா படத்துல. மேலே ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/240&oldid=1249947" இலிருந்து மீள்விக்கப்பட்டது