பக்கம்:வாடா மல்லி.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 219


கோட்டை தெரியுது பாரு. அந்தக் கோட்டையில் இருந்து ஒரு காலத்துல அரசாண்ட மவராசா காட்டுக்கு வேட்டையாடப் போயிருக்கான். அங்கே, துர்க்காதேவி தன் தம்பியோட ஏதோ பேசிட்டு இருந்திருக்காள். மவராசா பார்த்துட்டான். தேவிகிட்ட போயி “ஒன்னோட நான் சேரனும். சாயங்காலம் வருவேன். தயாரா இருன்னு சொல்லிட்டுப் போயிட்டான். அரசனாச்சே. தடுக்க முடியுமோ. இப்போ நமக்கு எப்படி போலீசோ அப்படி அப்போ அவங்களுக்கு மவராசா துர்க்கா தேவி, தவியாய் தவிச்சாள். உடனே, தம்பிக்காரன் அக்கா சேலையை உடுத்துக்கிட்டு அவள மாதிரியே வேசம் போட்டான், அக்காவுக்கு தன்னோட துணியக் கொடுத்து, அவளுக்கு ஆம்பளை வேஷம் போட்டு வாசல்ல உட்கார வச்சுட்டு இவன் குடிசைக்குள்ள போயிட்டான். சொன்ன நேரத்துக்கு வந்த மவராசா, குடிசைக்குள் போய், பொம்பளை வேடம் போட்டவனை ஏதோ பண்ணிட்டுப் போயிட்டான். வெளியே வந்த தம்பி, துர்க்காதேவியைப் பார்த்தான். பக்கத்துல வந்த ஒரு நாயை கீழே வெட்ட வேண்டியதை வெட்டிட்டு, தம்பிக்கும் அப்படி வெட்டிட்டாள். தம்பிகிட்ட சொல்லிட்டாள். இனிமேல் நீ அலியப்பா. ஒனக்குன்னு தனி ஒலகத்தை நான் தாறேன்! நீ அலி அவதாரமாக பக்ராஜி என்கிற இடத்துக்குப் போ.. அங்க ஒனக்கு கோயில் கட்டிக் கும்பிடுவாங்க ஒன்னத் தேடி வார அலிகள் காலுலயும், எல்லோரும் விழுந்து கும்பிடுவாங்க... நீயோ ஒன் வம்சாவளியில யாரோ ஒருத்தரைப் பார்த்து பொட்டையா போன்னு சொன்னால் சொன்னதுதான். நிச்சயமா பலிக்கும். இது, நான் ஒனக்கு கொடுக்கிற வரம் என்று துர்கா சொல்லிவிட்டால் இதுதான் நம்ம வரலாறு. அதனாலதான் அறுத்துப் போட்ட ஒவ்வொரு பொட்டையும், முதல்ல நாய்கிட்ட காட்டணும். அப்புறம் நாற்பது நாள் விரதம் இருக்கணும். அதற்குப் பிறகு இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/241&oldid=1249950" இலிருந்து மீள்விக்கப்பட்டது