பக்கம்:வாடா மல்லி.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சு. சமுத்திரம்


சிரிப்அாய் சிரிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு தலையைச் சுற்றினாள். என்ன நினைத்தாளோ.. ஏது நினைத்தாளோ.

எல்லா அலிகளும், குரு அலியிடம், பயபக்தியோடு குங்குமத்தை வாங்கிக் கொண்டார்கள். முன்வரிசை, பின்வரிசையாகும்படி முகங்கள் திரும்பின. ஆனாலும் தலையில் பால் குடத்தை ஏற்றிய பாத்திமா முன்னால் வந்தாள். இருபுறமும் குரு அலியும், குருவக்காவும், தாய்க்காரி மதனாவும் சூழ, அவள் தன்பாட்டுக்கு நடந்தாள். அத்தனை அலிகளும், தத்தம் அந்தஸ்தை தாமே நிச்சயித்துக் கொள்வதுபோல் திருத்தி அமைந்த வரிசையில் பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். ‘என்ஜினியர் மகள் கிடைத்ததால் தனது அந்தஸ்தை உயர்த்திக்கொண்ட பச்சையம்மா சுயம்புவோடு அந்த ஊர்வலத்தின் தலைக்குக் கழுத்துப் பகுதியானாள்.

அந்த அலி ஊர்வலம், சிரிப்பும் கும்மாளமுமாய் புறப்பட்டது. வளையல்கள் குலுங்கின. கொலுசுகள் கும்மாளமிட்டன. சிலர் சினிமாப் பாட்டுப் பாடினார்கள். சிலர் அதற்கு ஏற்றாற்போல் அங்குமிங்குமாய் ஆடினார்கள். அதேசமயம், வழக்கமான ஊர்வலத்தைப் போல் அக்கம் பக்கத்தை அலட்சியமாகப் பார்க்காமல், அடக்க ஒடுக்கமாகப் போனார்கள். பிரதான சாலை வழியாய், மயிலாக ஆடி, குயிலாகப் பாடி, ஒயிலாக நடந்து, அண்ணா சதுக்கம் வந்து, அதற்கு அப்பால் எழிலகத்திற்கு எதிரே ஒரு இறங்கு முனைக்குப் போனபோது, சரிவுப் புல்தரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/244&oldid=1249957" இலிருந்து மீள்விக்கப்பட்டது